Friday, October 11, 2024

பிறர்க்காக வாழ்ந்தாய்(சுமைதாங்கி சாய்ந்தால் )-TATA


பிறர்க்காக வாழ்ந்தாய் உன் போல யாரு 
பிறர் போற்ற வாழ்ந்தாய் குணத்தாலும் மேரு 
(2)
(MUSIC)

பணம் கொண்டபோதும் பணம் தேட ஓடும் (2)
பலர் போல டாட்டா நீ இல்லை மேலும்
பணம் கொண்டு சேவை செய்தாரே டாட்டா
எனச் சொல்லுவாரே உலகோரும் உன்..னை  
பிறர்க்காக வாழ்ந்தாய் உன் போல யாரு 
பிறர் போற்ற வாழ்ந்தாய் குணத்தாலும் மேரு
(MUSIC)

தவறான செய்கை உலகெங்கும் ஆட்சி
தவறான பேர்க்கே உலகெங்கும் மாட்சி 
அறம் கொண்ட பேரின் வியாபாரம் வீழ்ச்சி
அதை மாற்றி அங்கே அறம் கொண்டு நன்கே 
வியாபாரம் செய்தே புகழ் கொண்ட அய்யே
பிறர்க்காக வாழ்ந்தாய் உன் போல யாரு 
பிறர் போற்ற வாழ்ந்தாய் குணத்தாலும் மேரு


Friday, April 8, 2022

55.இமை மூடிக் கேட்டால்(சுமை தாங்கி சாய்ந்தால்)

 

இமை மூடிக் கேட்டால் சுமை நெஞ்சில் போகும்
அதனாலே மன்னா பார் உன்னைப் போற்றும் 
(2)
(MUSIC)

அவர் பாடல் கேட்கும் கணம் நெஞ்சில் கூடும்  (2)
இதம் தன்னின் தன்மை யார் சொல்லக் கூடும்
அதை நாளும் கேட்டே நாம் போகலாமா 
ஸ்வர்க்கத்தை நெஞ்சே நாம் காணலாம் வா 
இமை மூடிக் கேட்டால் சுமை நெஞ்சில் போகும்
அதனாலே மன்னா பார் உன்னைப் போற்றும் 
(MUSIC)

எளிதாக மன்னர் தரும் நாத மாட்சி (2)
கொள்கின்ற நெஞ்சம் உடன் கொள்ளும் மீட்சி
இதைச் சொல்லவென்று பல உண்டு சாட்சி
என் காலம் போகும் அதைப் பேசி பேசி   
இமை மூடிக் கேட்டால் சுமை நெஞ்சில் போகும்
அதனாலே மன்னா பார் உன்னைப் போற்றும்


பிற பாடல்கள்


Monday, January 31, 2022

54.ஒலிகள் ஸ்வரமாகச் சேரும்(கவிதை அரங்கேறும் நேரம்) **

 

சப்த ஸ்வரம் தன்னில் இனிக்கும் விதம் நல்ல பலராகம் பிறக்கும் 
அவை யாவும் உன் பாட்டில் ஒலிக்கும் கணம் தன்னில் பெறும் மேலும் வனப்பும்
சப்த ஸ்வரம் தன்னில் இனிக்கும்

(MUSIC)
ஒலிகள் ஸ்வரமாகச் சேரும் அவை இனிக்கும் இசையான ராகம்
அவை யாவும் உனை வந்து சேரும் வந்த பிறகு தேனாக மாறும்
ஒலிகள் ஸ்வரமாகச் சேரும் அவை இனிக்கும் இசையான ராகம்
(SM)

ராகம் எல்லாமும் தேடி உனைச் சேரும் சொந்தம் கொண்..டாடி (2)
அவை யாவும் உன் மெட்டில் ஊறி இதம் சேர்க்கும் என் காதில் தூறி  

என் உள்ளம் அதனோடு செல்லும் பின் என்னில் திரும்பாது என்றும் 
ஒலிகள் ஸ்வரமாகச் சேரும் அவை இனிக்கும் இசையான ராகம்
(MUSIC)

வரியை தீந்தேனில் நனைத்து திரை இசையாய் நீ தந்த விருந்து
என் நெஞ்சில் என்றென்றும் இருக்கு 
அந்த இதம்போல்  வேறில்லை எனக்கு 
உன் இசையில் வசமான நிலையில் 
சொல்லு  எங்கே மனம் நாடும் உலகை 

ஒலிகள் ஸ்வரமாகச் சேரும்
அவை இனிக்கும் இசையான ராகம்

(MUSIC)

பேரில் நீ கொண்ட நாதம் எழில் இசையாய் உன் பாட்டில் மாறும்
அது வார்த்தைக்
கு எட்டாத ராகம் அந்த இசையே தெய்வீக சாரம்
மறு பிறவி உண்டென்று ஆனால் உன் இசையைப் பெறும் பாக்யம் வேணும்
ஒலிகள் ஸ்வரமாகச் சேரும்
அவை இனிக்கும் இசையான ராகம்
அவை யாவும் உனை வந்து சேரும் 
வந்த பிறகு தேனாக மாறும்

(BOTH)

ஒலிகள் ஸ்வரமாகச் சேரும்
அவை இனிக்கும் இசையான ராகம்



பிற பாடல்கள்



Thursday, January 27, 2022

53. புலர்ந்தும் புலராத(மலர்ந்தும் மலராத) **

 

புலர்ந்தும் புலராத காலை முதற்கொண்டு உனது இசை கேட்ட நாள் 
அந்த நிலையைத் தான் கண்டு போதும் எழு என்று தாயின் வசை கேட்ட நாள்
துறக்க முடியாமல் உனது இசைதன்னில் மனதைப் பறி தந்த நாள் 
அந்த நினைவு மறக்காமல் நெஞ்சில் என்றென்றும் இருக்கும் அது தங்க நாள் 
(Short Music)
புலர்ந்தும் புலராத காலை முதற்கொண்டு உனது இசை கேட்ட நாள் 
அந்த நிலையைத் தான் கண்டு போதும் எழு என்று தாயின் வசை கேட்ட நாள்
துறக்க முடியாமல் உனது இசைதன்னில் மனதைப் பறி தந்த நாள் 
அந்த நினைவு மறக்காமல் நெஞ்சில் என்றென்றும் இருக்கும் அது தங்க நாள் 
(MUSIC)

தாயை தினம் கெஞ்சி தந்தை கால் பற்றி காசை அடைந்தோம் அந்நாள் 
படம் காணப் பறந்தோம் அந்நாள் 
அன்று தரையில் மணல் குன்று செய்து அதன் மீது அமர்ந்து பார்த்தோம் அந்நாள்
இசையைக் கேட்டோம் அந்நாள்
உந்தன் பெயரைத் திரை கண்டு இளமை மதம் கொண்டு 
உந்தன் பெயரைத் திரை கண்டு (vsm)
இளமை மதம் கொண்டு (vsm)
சீட்டி அடித்தோம் அந்நாள்
(Short Music)
என்ன இருந்தாலும் இன்று கிடைத்தாலும் அன்று போலாகுமா 
இசை கேட்ட நாளாகுமா
மன்னன் நீயும் இசைபோட்ட  நல்ல படம் காண விரைந்த நாளாகுமா 
மீண்டும் அது தோன்றுமா 
மன்னன் நீயும் இசைபோட்ட  நல்ல படம் காண
மன்னன் நீயும் இசைபோட்ட  
நல்ல படம் காண 
விரைந்த நாள் கிட்டுமா 
(MUSIC)
துறக்க முடியாமல் உனது இசைதன்னில் மனதைப் பறி தந்த நாள் 
அந்த நினைவு மறக்காமல் நெஞ்சில் என்றென்றும் இருக்கும் அது தங்க நாள் 
(MUSIC)
இரவில் இமை-மூடி உறக்கம் கொள்ளாமல்  உனது இசை கேட்ட நாள்
கனவில் வரும் காட்சி தனிலும் உன்-கீதம் கேட்டு இதம் கொண்ட நாள் 
கேட்டு இதம் கொண்ட நாள்
உயிரின் உணர்வாக உணர்வின் உயிராக உனது இசை கேட்ட நாள் 
அந்த நினைவு மாறாமல் அணுவின் அணுவாகப் புகுந்ததே எந்தன் நான் 
அய்யே உனது இசை எந்தன் நான் 
ம்ம்ம்..
ஆஹா ஆஹஹாஹாஹ ஆஹஹாஹாஹ ஆஹஹாஹாஹஹா
ஆஹ ஆஹஹாஹாஹஹா.. ஆஹ ஆஹஹாஹாஹஹா


பிற பாடல்கள்


Wednesday, January 26, 2022

52. உந்தன் இசையே(முத்துநகையே)

 

உந்தன் இசையே அய்யா தேனின் மழை ஆஹா ஆஹா 
எங்குமிலையே அய்யா அதற்கு இணை மனதை மயக்கும் கணை ஓஹோ ..ஓஹோ
(Short Music)
உந்தன் இசையே அய்யா தேனின் மழை ஆஹா ஆஹா 
எங்குமிலையே அய்யா அதற்கு இணை மனதை மயக்கும் கணை ஓஹோ ..ஓஹோ
(Music)

இரவும் பகலும் காதில் இனிக்கும் உந்தன் இசை என்ன வெல்லமோ 
நேரம் காலம் என்னும் உணர்வு உன்னிசையைக் கேட்கச் செல்லுமோ
உந்தன் இசையே அய்யா தேனின் மழை ஆஹா ஆஹா
(MUSIC)

வெள்ளித்திரை பாட்டாய்  நீ கொடுத்தாய் தித்திப்பது போலே நீ கொடுத்தாய் (2)
எப்படமும் ஓட வழிவகுத்தாய் இதுதான் இசையென நீ படைத்தாய் 
உந்தன் இசையே அய்யா தேனின் மழை ஆஹா ஆஹா 
எங்குமிலையே அய்யா அதற்கு இணை மனதை மயக்கும் கணை ஓஹோ ..ஓஹோ
(MUSIC)

உன்னிசையைக் கேட்டால் உணவெதற்கு  உன்னிசையின் ஊற்றே நீரெனக்கு  (2)
மெய்மறந்து கேட்டால்
(Short Music)
மெய்மறந்து கேட்டால் வேறெதற்கு அதுவே போதும் என இருக்கு (2)
(Short Music)
உந்தன் இசையே அய்யா தேனின் மழை ஆஹா ஆஹா 
எங்குமிலையே அய்யா அதற்கு இணை மனதை மயக்கும் கணை ஓஹோ ..ஓஹோ

பிற பாடல்கள்



Friday, October 22, 2021

49. ஈடு இல்லா உன்னிசையை (ஆட்டுவித்தால் யார் ஒருவர்) ***

 

ஈடு இல்லா உன்னிசையைச் கேளாதார் யார் மன்னா
மெட்டு என்றால் உன் பெயரைக் கூறாதார் யார் மன்னா
(SM)
ஈடு இல்லா உன்னிசையைச் கேளாதார் யார் மன்னா
மெட்டு என்றால் உன் பெயரைக் கூறாதார் யார் மன்னா
நீ கொடுக்கும் இசையுள்ளே நாதம் உண்டு (2)
என்றறிந்தே இட்டார் பெயரை விஸ்வ நாதன் என்று
உலகினையே கவர்ந்தாய் உந்தன் இசையினாலே
மன்னா அனுதினமும் பொழிந்தாய் இசையை மழையைப் போலே
அனுதினமும் பொழிந்தாய் இசையை மழையைப் போலே
ஈடு இல்லா உன்னிசையைச் கேளாதார் யார் மன்னா
மெட்டு என்றால் உன் பெயரைக் கூறாதார் யார் மன்னா
(MUSIC)
உன்-ஜோலி இசையொன்றே என்றாய் மன்னா
மக்கள் தன் ஜோலி உன்னிசையே என்பார் மன்னா
பாரிருக்கும் வரையில் உந்தன் இசையும் கேட்கும்
பின்பு அண்டம்-எங்கும் உந்தன் இசை-ஓம் என்றே கேட்கும்
அண்டம் எங்கும் உந்தன் இசை-ஓம் என்றே கேட்கும்
ஈடு இல்லா உன்னிசையைச் கேளாதார் யார் மன்னா
மெட்டு என்றால் உன் பெயரைக் கூறாதார் யார் மன்னா
(MUSIC)
சாதனைகள் புரிந்தாலும் செருக்கு இல்லை
துளி-தலைகனமோ ஒருக்காலும் உனக்கு இல்லை
உள்ளத்திலே குழைந்தையுமாய் உள்ளாய் மன்னா
இதை உணர்ந்து சொன்னார் உலகிலன்று பெரியோர் எல்லாம்
குழைந்தையினும் குழந்தை மனம் கொண்டாய் மன்னா
ஈடு இல்லா உன்னிசையைச் கேளாதார் யார் மன்னா
மெட்டு என்றால் உன் பெயரைக் கூறாதார் யார் மன்னா

பிற பாடல்கள்



50. யார் யார் இவர்(பூ மாலையில்) ***


யார் யார் இவர் யார் யார் என
உன்னைப் பார்த்தே பார் கேட்டது
உன்னைத் தேடி ராகம் வந்தது 
என்னைப் பாட்டில் போடென்றது
(2)
(MUSIC)
வள்ளலைப் போல் ஒரு பாட்டுக்கு நூறு .. ஆ..ஆ..ஆ..ஆ
மெட்டமைத்தாய் நீ இசை எனும் ஆறு.. ஆ..ஆ..ஆ..ஆ
வள்ளலைப் போல் ஒரு பாட்டுக்கு நூறு
மெட்டமைத்தாய் நீ இசை வரும் ஆறு
அதன்மேல் இனிமை உலகில் உளதோ (2)
கேட்டே இருந்தேன் இது நாள் வரையில்
கேட்டே இருப்பேன் வரும் நாள் உலகில்
யார் யார் இவர் யார் யார் என
உன்னைப் பார்த்தே பார் கேட்டது
உன்னைத் தேடி ராகம் வந்தது 
என்னைப் பாட்டில் போடென்றது
(MUSIC)
கொஞ்சும் குளிர் மழைச் சாரலைப் போலும்..ஆ..ஆ..ஆ..ஆ
உன்னிசை சில்லெனக் காதினுள் தூறும் ..ஆ..ஆ..ஆ..ஆ
கொஞ்சும் குளிர் மழைச் சாரலைப் போலும்
உன்னிசை சில்லெனக் காதினுள் தூறும்
மனிதன் வடிவில் உலகில் அருளும்(2)
இசையாய் மீண்டும் இறைவா வரணும் (2)
யார் யார் இவர் யார் யார் என
உன்னைப் பார்த்தே பார் கேட்டது
உன்னைத் தேடி ராகம் வந்தது 
என்னைப் பாட்டில் போடென்றது
உந்தன் பாட்டு தேன் போன்றது

பிற பாடல்கள்