Friday, October 11, 2024

பிறர்க்காக வாழ்ந்தாய்(சுமைதாங்கி சாய்ந்தால் )-TATA


பிறர்க்காக வாழ்ந்தாய் உன் போல யாரு 
பிறர் போற்ற வாழ்ந்தாய் குணத்தாலும் மேரு 
(2)
(MUSIC)

பணம் கொண்டபோதும் பணம் தேட ஓடும் (2)
பலர் போல டாட்டா நீ இல்லை மேலும்
பணம் கொண்டு சேவை செய்தாரே டாட்டா
எனச் சொல்லுவாரே உலகோரும் உன்..னை  
பிறர்க்காக வாழ்ந்தாய் உன் போல யாரு 
பிறர் போற்ற வாழ்ந்தாய் குணத்தாலும் மேரு
(MUSIC)

தவறான செய்கை உலகெங்கும் ஆட்சி
தவறான பேர்க்கே உலகெங்கும் மாட்சி 
அறம் கொண்ட பேரின் வியாபாரம் வீழ்ச்சி
அதை மாற்றி அங்கே அறம் கொண்டு நன்கே 
வியாபாரம் செய்தே புகழ் கொண்ட அய்யே
பிறர்க்காக வாழ்ந்தாய் உன் போல யாரு 
பிறர் போற்ற வாழ்ந்தாய் குணத்தாலும் மேரு


No comments:

Post a Comment