Friday, April 8, 2022

55.இமை மூடிக் கேட்டால்(சுமை தாங்கி சாய்ந்தால்)

 

இமை மூடிக் கேட்டால் சுமை நெஞ்சில் போகும்
அதனாலே மன்னா பார் உன்னைப் போற்றும் 
(2)
(MUSIC)

அவர் பாடல் கேட்கும் கணம் நெஞ்சில் கூடும்  (2)
இதம் தன்னின் தன்மை யார் சொல்லக் கூடும்
அதை நாளும் கேட்டே நாம் போகலாமா 
ஸ்வர்க்கத்தை நெஞ்சே நாம் காணலாம் வா 
இமை மூடிக் கேட்டால் சுமை நெஞ்சில் போகும்
அதனாலே மன்னா பார் உன்னைப் போற்றும் 
(MUSIC)

எளிதாக மன்னர் தரும் நாத மாட்சி (2)
கொள்கின்ற நெஞ்சம் உடன் கொள்ளும் மீட்சி
இதைச் சொல்லவென்று பல உண்டு சாட்சி
என் காலம் போகும் அதைப் பேசி பேசி   
இமை மூடிக் கேட்டால் சுமை நெஞ்சில் போகும்
அதனாலே மன்னா பார் உன்னைப் போற்றும்


பிற பாடல்கள்


No comments:

Post a Comment