Monday, January 31, 2022

54.ஒலிகள் ஸ்வரமாகச் சேரும்(கவிதை அரங்கேறும் நேரம்) **

 

சப்த ஸ்வரம் தன்னில் இனிக்கும் விதம் நல்ல பலராகம் பிறக்கும் 
அவை யாவும் உன் பாட்டில் ஒலிக்கும் கணம் தன்னில் பெறும் மேலும் வனப்பும்
சப்த ஸ்வரம் தன்னில் இனிக்கும்

(MUSIC)
ஒலிகள் ஸ்வரமாகச் சேரும் அவை இனிக்கும் இசையான ராகம்
அவை யாவும் உனை வந்து சேரும் வந்த பிறகு தேனாக மாறும்
ஒலிகள் ஸ்வரமாகச் சேரும் அவை இனிக்கும் இசையான ராகம்
(SM)

ராகம் எல்லாமும் தேடி உனைச் சேரும் சொந்தம் கொண்..டாடி (2)
அவை யாவும் உன் மெட்டில் ஊறி இதம் சேர்க்கும் என் காதில் தூறி  

என் உள்ளம் அதனோடு செல்லும் பின் என்னில் திரும்பாது என்றும் 
ஒலிகள் ஸ்வரமாகச் சேரும் அவை இனிக்கும் இசையான ராகம்
(MUSIC)

வரியை தீந்தேனில் நனைத்து திரை இசையாய் நீ தந்த விருந்து
என் நெஞ்சில் என்றென்றும் இருக்கு 
அந்த இதம்போல்  வேறில்லை எனக்கு 
உன் இசையில் வசமான நிலையில் 
சொல்லு  எங்கே மனம் நாடும் உலகை 

ஒலிகள் ஸ்வரமாகச் சேரும்
அவை இனிக்கும் இசையான ராகம்

(MUSIC)

பேரில் நீ கொண்ட நாதம் எழில் இசையாய் உன் பாட்டில் மாறும்
அது வார்த்தைக்
கு எட்டாத ராகம் அந்த இசையே தெய்வீக சாரம்
மறு பிறவி உண்டென்று ஆனால் உன் இசையைப் பெறும் பாக்யம் வேணும்
ஒலிகள் ஸ்வரமாகச் சேரும்
அவை இனிக்கும் இசையான ராகம்
அவை யாவும் உனை வந்து சேரும் 
வந்த பிறகு தேனாக மாறும்

(BOTH)

ஒலிகள் ஸ்வரமாகச் சேரும்
அவை இனிக்கும் இசையான ராகம்



பிற பாடல்கள்



No comments:

Post a Comment