Friday, October 22, 2021

50. யார் யார் இவர்(பூ மாலையில்) ***


யார் யார் இவர் யார் யார் என
உன்னைப் பார்த்தே பார் கேட்டது
உன்னைத் தேடி ராகம் வந்தது 
என்னைப் பாட்டில் போடென்றது
(2)
(MUSIC)
வள்ளலைப் போல் ஒரு பாட்டுக்கு நூறு .. ஆ..ஆ..ஆ..ஆ
மெட்டமைத்தாய் நீ இசை எனும் ஆறு.. ஆ..ஆ..ஆ..ஆ
வள்ளலைப் போல் ஒரு பாட்டுக்கு நூறு
மெட்டமைத்தாய் நீ இசை வரும் ஆறு
அதன்மேல் இனிமை உலகில் உளதோ (2)
கேட்டே இருந்தேன் இது நாள் வரையில்
கேட்டே இருப்பேன் வரும் நாள் உலகில்
யார் யார் இவர் யார் யார் என
உன்னைப் பார்த்தே பார் கேட்டது
உன்னைத் தேடி ராகம் வந்தது 
என்னைப் பாட்டில் போடென்றது
(MUSIC)
கொஞ்சும் குளிர் மழைச் சாரலைப் போலும்..ஆ..ஆ..ஆ..ஆ
உன்னிசை சில்லெனக் காதினுள் தூறும் ..ஆ..ஆ..ஆ..ஆ
கொஞ்சும் குளிர் மழைச் சாரலைப் போலும்
உன்னிசை சில்லெனக் காதினுள் தூறும்
மனிதன் வடிவில் உலகில் அருளும்(2)
இசையாய் மீண்டும் இறைவா வரணும் (2)
யார் யார் இவர் யார் யார் என
உன்னைப் பார்த்தே பார் கேட்டது
உன்னைத் தேடி ராகம் வந்தது 
என்னைப் பாட்டில் போடென்றது
உந்தன் பாட்டு தேன் போன்றது

பிற பாடல்கள்


No comments:

Post a Comment