Friday, October 22, 2021

51. முத்துக்களாய் தந்தாய்(முத்துக்களோ கண்கள்) **

 

முத்துக்களாய் தந்தாய் தித்திப்பதாய் தந்தாய்
மெல்லிசை ராஜ்ஜியம் மன்னவன் நீ-உள்ளம்
கொள்ளை கொண்டாய் அய்யே
(2)
கொடுத்த பாடல் என்ன ஒவ்வொன்றும் காட்டும் ஜாலம் என்ன
தூண்டிலாய் இசைபோட்டு என்-மன மீனை இழுப்பதென்ன
முத்துக்களாய் தந்தாய் தித்திப்பதாய் தந்தாய்
மெல்லிசை ராஜ்ஜியம் மன்னவன் நீ-உள்ளம்
கொள்ளை கொண்டாய் அய்யே
(MUSIC)
உன்னை நாடி வந்து நெஞ்சம் உந்தன் இசை கேட்க (2)
உலவும் மனமும் உலகம் மறந்து உந்தன் வசமாக
மண்ணில் சொர்க்கம் தன்னை உன் பாடல் ஒன்று படைத்ததென்ன
அதனில் வாழ்வதற்கே தேவர் இறங்கி வந்ததென்ன
முத்துக்களாய் தந்தாய் தித்திப்பதாய் தந்தாய்
மெல்லிசை ராஜ்ஜியம் மன்னவன் நீ-உள்ளம்
கொள்ளை கொண்டாய் அய்யே
(MUSIC)
இசையின் ராஜர் கவியின் ராஜர் இருவர் சேர்ந்ததென்ன (2)
உலகில் ரசிகர் மனதை வென்று ஆட்சி புரிந்ததென்ன
விளைந்த கானம் என்ன என் நெஞ்சில் செய்த மாயமென்ன
நாளும் பொழுதும்-எப்போதும் எந்தன் நெஞ்சில் ஒலிப்பதென்ன
முத்துக்களாய் தந்தாய் தித்திப்பதாய் தந்தாய்
மெல்லிசை ராஜ்ஜியம் மன்னவன் நீ-உள்ளம்
கொள்ளை கொண்டாய் அய்யே

பிற பாடல்கள்


No comments:

Post a Comment