Saturday, August 21, 2021

48. உலகு உந்தன் (நிலவு வந்து வானத்தையே திருடிக் கொண்டது) ***

 


உலகு உந்தன் இசையினிலே மயங்கிப் போனது (2)
நீ கொடுத்த இசையமுதில் கிறங்கிப் போனது
உலகு உந்தன் இசையினிலே மயங்கிப் போனது
கனவில் அது நினைவில் அது என்று ஆனது (2)
அது கொடுத்த போதை தன்னில் எதும் மறந்து போகுது (2)
கனவிலது நினைவிலது என்று ஆனது
அது கொடுத்த போதை தன்னில் எதும் மறந்து போகுது மறந்து போகுது
(MUSIC)

மன்னா-உன் இசையில் இசையும் தன்னை மறந்து போனது
ராகம் என்ற தேவதையோ  மேனி சிலிர்த்து நின்றது
(2)
எந்நாளும் கேட்டிராத மெல்லிசையோ உன்னது (2)
மன்னா எங்கள் இதயம் உன்னிசையில் உள்ளது
உலகு உந்தன் இசையினிலே மயங்கிப் போனது கிறங்கிப் போனது
(MUSIC)

ஆ...
(MUSIC)
யாக்கை போய் மனித உணர்வு இறைவன் உணர்வில் சேர்வது
மேலான யோகமென்று பதஞ்சலியார் சொன்னது
ஆஹா அவ்வுணர்வை உந்தன் மெட்டில் ஒன்றே தருகுது-என்
ஐயே உன்னாலெவர்க்கும் யோகம் எளிதில் கூடுது
உலகு உந்தன் இசையினிலே மயங்கிக் கிடக்குது மயங்கிக் கிடக்குது
(MUSIC)

இப்பாட்டில் உரைத்ததுவோ கொஞ்சம் வெளியில் தெரிவது
சொல்லாத உணர்வதுவோ உனது இசைக்கு உரியது
என் காதில் ஒலிப்பதுவோ உனது இசையின் பாட்டது
எந்நாளும் அது நிலைத்தால் எனது வாழ்வின் பேறது
உலகு உந்தன் இசையினிலே மயங்கிக் கிடக்குது
நீ கொடுத்த இசையமுதில் கிறங்கிப் 
கிடக்குது
உலகு உந்தன் இசையினிலே மயங்கிக் கிடக்குது

பிற பாடல்கள்


No comments:

Post a Comment