Sunday, September 27, 2020

ரசிகர் எண்ணி வருந்துகிறார் ( ஆயர்பாடி மாளிகையில்) SPB இரங்கற்பா ***

ரசிகர்-எண்ணி வருந்துகிறார் உன்-பிரிவால் வாடுகிறார்
தவிக்க-விட்டுப் பறந்து-விட்டாய் ஏன்-அய்யா
(1+Short Music+1) 
அவர் உனை-நினைந்து மனமுருகி ப்ரார்த்தனைகள் செய்ததனை 
அறிந்திலையோ புரிந்திலையோ சொல் அய்யா .
அவசரமாய்ச் சென்றனையே ஏன் அய்யா 
ரசிகர்-எண்ணி வருந்துகிறார் உன்-பிரிவால் வாடுகிறார் 
தவிக்க-விட்டுப் பறந்து-விட்டாய் ஏன்-அய்யா 
(MUSIC)
தரையுலகில் வாழ்ந்திருந்தும் திரையுலகில் உயரம் தொட்டாய்
எனினும்-அந்தோ பறந்து-விட்டாய் ஏன் அய்யா
(2)
இனித் திரையுலகில் உயரம்-தொட ஏதுமிலை என்று-அந்த
இறையுலகைச் சேர்ந்தனையோ சொல் அய்யா
இறைவன்-வரை உயர்ந்தனையோ சொல் அய்யா 
ரசிகர்-எண்ணி வருந்துகிறார் உன்-பிரிவால் வாடுகிறார் 
தவிக்க-விட்டுப் பறந்து-விட்டாய் ஏன்-அய்யா 
(MUSIC)
ரசிகர்-படும் பாட்டை-ஒரு பாட்டினிலே சொல்லுகிறேன் 
போதலையோ விரைந்து-வந்தே கேளாயோ
(2)
உன் உள்ளத்தையே-உருக்கும் ஒரு-பண்ணிசையைப் பாடுகிறேன் 
கேட்பதற்கு மனமிலையோ சொல் ஐயா 
வருவதற்கு மனமிலையோ சொல் ஐயா 
ரசிகர்-எண்ணி வருந்துகிறார் உன்-பிரிவால் வாடுகிறார் 
தவிக்க-விட்டுப் பறந்து-விட்டாய் ஏன்-அய்யா 
(MUSIC)
நீ-விரைவில் திரும்பிடுவாய் இசையுலகில் வலம்-வருவாய் 
என-ரசிகர் எதிர்-பார்த்தே வாழ்ந்தாரே 
(2)
அந்த நிலைமை-தனை நீ-அறிந்தும் ரசிகர்களை நீ-அறிந்தும் 
விரைந்தனையே பறந்தனையே ஏன் அய்யா 
ஞாயமென்ன தர்மமென்ன சொல் அய்யா 
ரசிகர்-எண்ணி வருந்துகிறார் உன்-பிரிவால் வாடுகிறார் 
தவிக்க-விட்டுப் பறந்து-விட்டாய் ஏன்-அய்யா 
தவிக்க-விட்டுப் பறந்து-விட்டாய் ஏன்-அய்யா ..

No comments:

Post a Comment