Thursday, May 28, 2020

46 அழகான இசை கேட்டு (அலங்காரம் கலையாத) **





அழகான இசை-கேட்டு நாளாச்சு மன்னா
வந்தே உன் இசை-போடு முன்-போலவே
(2)
நானந்த ராகங்கள் விளையாடக் கண்டேன் 
ஐயா உன் இசை சேர்ந்த பல பாட்டிலே
(2)
ஐயா உன் இசை சேர்ந்த பல பாட்டிலே
(MUSIC)
அந்நாளில் நீ-தந்த இன்ப-ஸ்வரம் 
எந்நாளும் பாருக்கு ஈசன்-வரம்
(2)
நூற்றொடு ஒன்றாக போகின்றதல்ல 
நீ போட்ட பலநூறும் வைரம் தரும் 
சுடர்-போல ஒளிவீசி இன்றும்-இரும்
அழகான இசை-கேட்டு நாளாச்சு மன்னா
வந்தே உன் இசை-போடு முன்-போலவே
(MUSIC)
ஆறாகக் கவி-ராஜர் வரி-சொல்லுவார்
சீராக அதற்கென்று இசை பண்ணுவாய் 
என்றேனும் நீ-மீண்டும் இசை போட-வென்று 
வாராயோ என-ஏங்கித் தான்-வாழுறோம்
எந்நாளும் உனை-எண்ணித் தான்-வாழுவோம்
அழகான இசை-கேட்டு நாளாச்சு மன்னா
வந்தே உன் இசை-போடு முன்-போலவே
(MUSIC)
 பேர்-கோடி வந்தாலும் உன்போலிசை
அழகாகத் தருவார்-யார் யார்-பார் மிசை
(2)
தேனாக நீ-செய்த இசையுண்டு சாட்சி (2)
புவிமீது கேட்போர்க்கு அதைக் காட்டுவோம்  
இசை-ராஜன் உனைப் போற்றிப் பண்பாடுவோம்
அழகான இசை-கேட்டு நாளாச்சு மன்னா
வந்தே உன் இசை-போடு முன்-போலவே
அழகான இசை-கேட்டு நாளாச்சு மன்னா
வந்தே உன் இசை-போடு முன்-போலவே
 





No comments:

Post a Comment