Saturday, May 16, 2020

44 அவர்க்கென்றும் (வசந்தங்கள் வரும் முன்னே)




அவர்க்கென்றும் இவர்க்கென்றும் இசை இல்லையே
எவர்க்கும்-உன் இசைத் தென்றல் இதம் சேர்த்ததே
(2)
எந்நாளும் இணை  இல்லை 
மன்னா-உன் இசைக்கில்லை
(SM)
தனக்கென்று இசை பெற்ற ஓர் பிள்ளையே 
இசைக்குன்று உனக்குண்டோ ஓர் எல்லையே
இசைக்கென்று இசை-தந்த இசை தெய்வமே 
வசைகூட எழில்-காட்டும் உன் பாட்டிலே
எந்நாளும் இணை  இல்லை 
மன்னா-உன் இசைக்கில்லை
(MUSIC)
கவி-அன்று வரி..சொல்லும் முன்னாலதை  
மெருகேற்ற உடன்-செய்தாய் மன்னா-இசை 
அவர்-கூறும் வரிக்கெல்லாம் உயிராய்-இசை 
தனைச்-செய்த உனக்குகேது புவிமேல்-இணை
தினம்-எந்தன் மனம்-உன்னை நினைக்கின்றதே
மலை-போல அதில்-ஏக்கம் கனக்கின்றதே
இசைத்-தந்தை இசை-கேட்கத் தவிக்கின்றதே 
உனக்குப் பின் இசைக்குண்டோ உயிர் என்பதே
அவர்க்கென்றும் இவர்க்கென்றும் இசை இல்லையே
எவர்க்கும்-உன் இசைத் தென்றல் இதம் சேர்த்ததே
ஆ ...ஆ... ஓ .. ஓ ..



No comments:

Post a Comment