Wednesday, May 6, 2020

43. இசைக்கு நல்ல (நிலவு வந்து வானத்தையே) **



இசைக்கு-நல்ல இசையைக்-கேட்க ஆசை-வந்தது (2) 
இசையின்-மன்னன் உனையடைந்து  தஞ்சம் என்றது
இசைக்கு-நல்ல இசையைக்-கேட்க ஆசை-வந்தது
மனது-கொள்ளை போகும்-உந்தன் இசையைக்-கேட்டது (2)
அது இசையைக்-கொஞ்சம் உன்னைக்-கேட்டுக் கற்றுக்கொண்டது (2)
மனது-கொள்ளை போகும்-உந்தன் இசையைக்-கேட்டது
அது இசையைக்-கொஞ்சம் உன்னைக்-கேட்டுக் கற்றுக்கொண்டது
கற்றுக்கொண்டது
(MUSIC)
மன்னா-பின் அந்த-ராகம் உன்னைத்-தேடி வந்தது
மன்னனுந்தன் மெல்லிசையால் அழகு சேர்த்துக் கொண்டது 
(2)
பின்னாலே வந்த-பேரும் உந்தன் இசையைச் சொல்வது (2)
பண்ணாக மட்டும் அல்ல தெய்வீகம் என்பது
இசைக்கு-நல்ல இசையைக்-கேட்க ஆசை-வந்தது ஆசை-வந்தது
(MUSIC)
ஆ.
காக்கையின் சிறகிலன்று பா..ரதியார் கண்டது
கண்ணனவன் கருமையினை என்று-கவிதை சொல்லுது
இந்நாளில் அவர்-இருந்தால் உன்னிசையைச் சொல்வது 
என் மன்னா-நல் மெல்லிசையின்  எல்லை-அது என்பது
இசைக்கு-நல்ல இசையைக்-கேட்க ஆசை-வந்தது ஆசை-வந்தது
(MUSIC)
எப்போது வயிற்றுக்கு-நல் உணவு தன்னைக் கொள்வது
என்பதனைத் திருக்குறளும் எடுத்தழகாய்ச் சொல்லுது
காதாலே உண்பது-தான் உனது இசையில்-உள்ளது
அதை உண்டோர்கள்  வயிற்றுக்காக உண்பதென்பதரியது
இசைக்கு-நல்ல இசையைக்-கேட்க ஆசை-வந்தது
இசையின்-மன்னன் உனையடைந்து  தஞ்சம் என்றது
இசைக்கு-நல்ல இசையைக்-கேட்க ஆசை-வந்தது


No comments:

Post a Comment