Wednesday, March 4, 2020

41. எவர் வருவார்(சிலர் சிரிப்பார் சிலர் அழுவார்) **

விருத்தம்
காலம் பல-கடந்தும் உன்னிசை-தான் கேட்கின்றேன் 
எந்நாளும் உன்னிசையால் கவலை-பல மறந்தேனே ஏ..
சொல்ல-ஒரு மொழியிலையே உன்னிசைக்கு இணையிலையே
அதனை-மறந்து வேரிசை கேட்பதற்கும் முடியலையே ஏ..

___________________________________________________

எவர்-பிறப்பார் எவர்-இருப்பார் இசை-கொடுப்பதற்கே இனி-இங்கே
(2)
எவர் வருவார் .. இசைதருவார் ..
பார் ரசிப்பதற்கே இனி இங்கே 
எவர்-பிறப்பார் எவர்-இருப்பார் இசை-கொடுப்பதற்கே இனி-இங்கே
(MUSIC)
போதும் உன்னிசை போதும் 
அந்த போதையில் கவலைகள் போகும் 
(2)
என்றே எண்ணி இருக்கின்றேன் 
உனதிசையால்-தான் வாழ்கின்றேன்
எவர் வருவார் .. இசைதருவார் ..  பார் ரசிப்பதற்கே இனி இங்கே
எவர்-பிறப்பார் எவர்-இருப்பார் இசை-கொடுப்பதற்கே இனி-இங்கே
(MUSIC)
இசையே உந்தன் உள்ளம் அதில் இனிமை ஒன்றே பொங்கும்
 உனதிசையால்-தான் வாழ்கின்றேன் 
உணவாய் அதைத்-தான் உண்கின்றேன்
எவர் வருவார் .. இசைதருவார் ..  பார் ரசிப்பதற்கே இனி இங்கே
(MUSIC)
காலம் அது-பொற் காலம் உன் இசையால்-எனவே கூறும் (2)
குரல்-பல ஒலிப்பதைக் கேட்கின்றேன் 
ஏக்கத்தை அதில்-நான் பார்க்கின்றேன்
எவர் வருவார் .. இசைதருவார் ..  பார் ரசிப்பதற்கே இனி இங்கே
எவர்-பிறப்பார் எவர்-இருப்பார் இசை-கொடுப்பதற்கே இனி-இங்கே

No comments:

Post a Comment