Tuesday, November 12, 2019

37 மன்னர் மெல்லிசையை (பாவையின் முகத்தை) **

பாட்டின்றும் கேட்கும் பரவசமாக்கும்  வா அதைக் கேட்டிடுவோம்
மன்னர்-மெல்லிசையைக் கேட்டால் இனிக்கும் வா அதைக் கேட்டிடுவோம்
(SM)

(MUSIC)
ஊரெங்கும் கேட்கும் இனிமையைச் சேர்க்கும்
இணையாய் அதற்கு இல்லை .. ஓ..இணையாய் எதுவும்  இல்லை
அது தான் அதற்கு இணை
நானதன் பெருமை எழுதிட வந்தேன் ஆனால் முடியவில்லை ஓ..
வார்த்தையில் முடியவில்லை
வார்த்தையில் அடங்கவில்லை
அவரின்  இசையைக் கேட்டுக்கொண்டிருந்தால் வேறேதும் தேவையில்லை
ஆகாரம் தேவையில்லை
பாட்டிசை-போட்டது ஆண்டுகள்-ஆனது ஆயினும் அவரிசை இன்றும்-இருக்குது
ஆண்டுகள் ஆயிரம் சென்றுமினித்திடும் காதினுள் தேன்போலே
மன்னர்-மெல்லிசையைக் கேட்டால் இனிக்கும் வா அதைக் கேட்டிடுவோம்
பாட்டின்றும் கேட்கும் பரவசமாக்கும்  வா அதைக் கேட்டிடுவோம்
மன்னர்-மெல்லிசையைக் கேட்டால் இனிக்கும் வா அதைக் கேட்டிடுவோம்
(MUSIC)
ஓமென்ற ஓசை தானென்று சொன்னான் இறைவன் வேதத்திலே..
இறைவன் வேதத்திலே
தானன்று வந்தே இசையென்று நின்றான் விசுவின் நாதத்திலே
விஸ்வ…நாதனென்றே
இசையின் இறைவன் அவர்-என்பதாலே
நான்-கூறத் தேவையில்லை (2)
பாட்டிசை-போட்டது ஆண்டுகள்-ஆனது ஆயினும் அவரிசை இன்றும்-இருக்குது
ஆண்டுகள் ஆயிரம் சென்றுமினித்திடும் காதினுள் தேன்போலே
மன்னர்-மெல்லிசையைக் கேட்டால் இனிக்கும் வா அதைக் கேட்டிடுவோம்
பாட்டின்றும் கேட்கும் பரவசமாக்கும்  வா அதைக் கேட்டிடுவோம்
மன்னர்-மெல்லிசையைக் கேட்டால் இனிக்கும் வா அதைக் கேட்டிடுவோம்

No comments:

Post a Comment