Saturday, January 26, 2019

36 பாராளும் தெய்வம் என்றே(நீராடும் கண்கள் எங்கே)

பாராளும் தெய்வம் என்றே நீயானாய் நெஞ்சில் நின்றே (2)
 நீ வாராதிருந்தால் இசை தாராதிருந்தால் வாழ்க்கை-வேம்பாய்க் கசக்கும்  இல்லையோ
(MUSIC)
வேறெதும் கேட்டு வாழ்ந்திருப்பேனோ பாரினில் ஏங்கி வீழ்ந்திருப்பேனோ  
உந்தனிசைக்கீடு உலகினில் ஏது (2)
வேறெது கேட்கும் என்னிரு காது .. அது கேட்காது ..
பாராளும் தெய்வம் என்றே நீயானாய் நெஞ்சில் நின்றே
 நீ வாராதிருந்தால் இசை தாராதிருந்தால் வாழ்க்கை-வேம்பாய்க் கசக்கும்  இல்லையோ
(MUSIC)
இணையுமிலாத உனதிசைத்தேன் கணமொன்று தந்து மயங்கவைத்தாயே
இதுவரை இல்லா இசை-கொடுத்தாயே (2)
கணம் சலிக்காமல் களிக்க வைத்தாயே .. இன்னிசைத் தாயே
பாராளும் தெய்வம் என்றே நீயானாய் நெஞ்சில் நின்றே
 நீ வாராதிருந்தால் இசை தாராதிருந்தால் வாழ்க்கை-வேம்பாய்க் கசக்கும்  இல்லையோ

No comments:

Post a Comment