M.S.V. எனும் ஒரு சகாப்தம்
(24 June 1928 – 14 July 2015)
செவியில்-ஒரு அமுதம்-என்று உனதரும்-இசையே
(Short Music)
செவியில்-ஒரு அமுதம்-என்று உனதரும்-இசையே
துன்பத்திலும் இன்பம்-தரும் உனதருமிசையே (2)
(MUSIC)
மனிதர்கள்-தன் வாழ்வில்-என்றும் நிம்மதி-இல்லே (2)
என்று-சொல்லி புழுங்கி-வந்தார் தன்னகத்திலே
உந்தனிசைப் பாடல்-கேட்ட மாத்திரத்திலே
குறைந்ததய்யா மனச்சுமையும் ஓர்-கணத்திலே
துன்பத்திலும் இன்பம்-தரும் உனதருமிசையே
(MUSIC)
குறையாத பணமிருக்கும் செலவழிக்கவே
அங்கமெங்கும் பொன்-ஜொலிக்கும் சிலரிடத்திலே
அவை-யாவும் தந்திடாத நிம்மதி-ஒன்று
நீ-கொடுத்தாய் உனதிசையாய் வெகுமதி-என்று
துன்பத்திலும் இன்பம்-தரும் உனதரும்-இசையே
(MUSIC)
உலக-மாந்தர் நெஞ்சில்-என்றும் துயர்-இருந்தது
அதைக்-குறைக்க தெய்வம்-உன்னை அனுப்பி-வைத்தது
நீ-புனைந்த இசையை-அந்தோ தெய்வம்-கேட்டது
இன்னும்-என்ன இருக்கு-என்று அழைத்ததுக்-கொண்டது
துன்பத்திலும் இன்பம்-தரும் உனதரும்-இசையே
(MUSIC)
ஐயிரண்டு மாதம்-சென்றே பிள்ளை-பிறக்குது
அய்யா-உன் மெல்லிசையோ கணத்தில்-வருகுது
இசைத்தாயைப் பெற்றெடுத்த செல்வனல்லவோ
நாதத்துக்கே நாதன்-விஸ்வ நாதனல்லவோ
துன்பத்திலும் இன்பம்-தரும் உனதரும்-இசையே
செவியில்-ஒரு அமுதம்-என்று உனதரும் இசையே
துன்பத்திலும் இன்பம்-தரும் உனதரும் இசையே
No comments:
Post a Comment