Wednesday, September 6, 2017

35 உலகினிலா ஐயா நீ இருந்தாய்(மலர்களை போல் தங்கை உறங்குகிறாள்)



உலகினிலா ஐயா நீ இருந்தாய் (2)  
நெஞ்சின் ஆழத்தில்-போய் அங்கே குடியிருந்தாய்
(MUSIC)
உலகினிலா ஐயா நீ இருந்தாய்  
நெஞ்சின் ஆழத்தில்-போய் அங்கே குடியிருந்தாய்

அமிழ்தினும் இனிப்பதை நீ படைத்தாய் 
உந்தன் மெல்லிசைத் தேனதில் குழைத்தளித்தாய்
(2)
(MUSIC)
பாமரன் ஆகிய நான்-தொழும் உன்னிசை 
தன்னையே மேதையும் ஆ..ஹா..ஹா என்றார்
(2)
நானிலம் போற்றிடும் இன்னிசை என்பார்
(1+Short Music+1) 
உனதிசை ஒன்றை-என்றும் யாரும் நன்றே  என்பார்
அமிழ்தினும் இனிப்பதை நீ படைத்தாய் 
உந்தன் மெல்லிசைத் தேனதில் குழைத்து தந்தாய்
(MUSIC)
பூசையில் ஓதிடும் நான்மறை..யின்-ஸ்வரம்
உன்னிசைப்-பாடலில் ஒலிக்குது-என்பார்
(Short Music)
பாரினில் இன்னிசை உன்னிசை என்பார்
யாருமுன் போல்-என்றும் பாரில் இல்லை என்பார்    
அமிழ்தினும் இனிப்பதை நீ படைத்தாய் 
உந்தன் மெல்லிசைத் தேனதில் குழைத்து தந்தாய்
(MUSIC)
சேய்மனம் ஒன்றையே ஆண்டவன் என்பார் 
அன்னவர் உன்-மனம் சேயுளம் என்பார் 
(2)
(Short Music)
ஆண்டவன் பாட்டினில் உள்ளனன் என்பார்
உலகினில் வந்தே உன்னில் பாட்டின் தெய்வம் நின்றார்
உலகினிலா ஐயா நீ இருந்தாய்  
நெஞ்சின் ஆழத்தில்-போய் அங்கே குடியிருந்தாய்

அமிழ்தினும் இனிப்பதை நீ படைத்தாய் 
உந்தன் மெல்லிசைத் தேனதில் குழைத்து தந்தாய்
 (2)
மெல்லிசைத் தேனதில் குழைத்து தந்தாய்
குழைத்து தந்தாய் .. குழைத்து தந்தாய் 



No comments:

Post a Comment