Tuesday, July 28, 2015

தன்னை நினைக்கும் பூமியிலே (பொன்னை விரும்பும் பூமியிலே)-Dr. APJ அப்துல் கலாம்

( பொன்னை விரும்பும் பூமியிலே )

தன்னை நினைக்கும் பூமியிலே பிறரை-நினைத்தே வாழ்ந்தவரே
பதவி-தேடி அலையும்-உலகில் உதவிக்கென்றே இருந்தவரே
(2)
(MUSIC)

சேயினும்-தூய சிரிப்பு-கொண்டாயே
 தாயினும்-இனிய நெஞ்சு கொண்டாயே
 (2)
வாழ்வை பிறர்க்கே அர்ப்பணித்தாயே
எங்கள் பாரதத் தலை-மகன் நீயே
எளிய-வாழ்வும் இனிய-பேச்சும் புதிய-நோக்கும் கொண்டிருந்தாயே

தன்னை நினைக்கும் பூமியிலே பிறரை-நினைத்தே வாழ்ந்தவரே
பதவி-தேடி அலையும்-உலகில் உதவிக்கென்றே இருந்தவரே
(MUSIC)

பறந்து-சென்றே பதவியைக்-கேட்டே -
வாங்கிக்-கொள்ளும் மனிதரைப்-பார்த்தேன்
(2)
உதவிக்கென்றே நீ-ஒன்று தானே
அழைத்துக் கொண்டான் ஏன்-எமன் உன்னை
வளர்ந்த உருவும் குழந்தை-மனமும் -
என்று காண்பேன் நான் இனிமேல்

தன்னை நினைக்கும் பூமியிலே பிறரை-நினைத்தே வாழ்ந்தவரே
பதவி-தேடி அலையும்-உலகில் உதவிக்கென்றே இருந்தவரே
(MUSIC)

யாரும்-ஒருத்தர் குழந்தை-என்றாலே –
அடித்துப் பிடித்து அங்கு-செல்வாயே
(2)
 உலகின்-இளைய சிசுவுனை-அந்தோ 
காலனும் மேலே கொண்டு சென்றானே
உலகில்-இருந்த எண்பத்து-மூன்று வயதுக்-குழந்தை நீ யொன்றே  

தன்னை நினைக்கும் பூமியிலே பிறரை-நினைத்தே வாழ்ந்தவரே
 பதவி-தேடி அலையும்-உலகில் உதவிக்கென்றே இருந்தவரே

No comments:

Post a Comment