(பிள்ளைக்குத் தந்தை ஒருவன்)
என்றைக்கும் உன்-போல் வருமா
நீ எல்லோரும்-மதிக்கின்ற பெருமான்
(2)
நீ குழந்தையாய் மொழி படித்தாயே
நல்லத் தலைவனாய் வழி கொடுத்தாயே
(2)
என்றைக்கும் உன் போல் வருமா
நீ எல்லோரும்-மதிக்கின்ற பெருமான்
(MUSIC)
சேயான உள்ளக்-களிப்பாலும்
உந்தன் பூவான வெள்ளைச்-சிரிப்பாலும்
(2)
பூவான வெள்ளைச்-சிரிப்பாலும்
தேன் போல மொழி பேசி இருந்தாய்
நீ எல்லோருக்கும் நல்ல நண்பன் நண்பன்
என்றைக்கும் உன் போல் வருமா
நீ எல்லோரும்-மதிக்கின்ற பெருமான்
(MUSIC)
செல்வாக்கு எளிமைக்கும் உண்டு
எனச் சொன்னாயே உன் வாழ்வைக் கொண்டு
(2)
சொன்னாயே உன் வாழ்வைக் கொண்டு
சொல்லாமல் உனைக் கூட்டிச் சென்றான்
நாம் விடமாட்டோம் என்றெண்ணி இறைவன் இறைவன்
என்றைக்கும் உன் போல் வருமா
நீ எல்லோரும் மதிக்கின்ற பெருமான்
நீ குழந்தையாய் மொழி-படித்தாயே
நல்லத் தலைவனாய் வழி-கொடுத்தாயே
No comments:
Post a Comment