சேய்கள்-மறுக்காத தாயின் பால்-போல கொடுத்த இசை-அன்னையே
என்ன கொடுத்தும்-கிடைக்காத தாயின் மடிபோல கிடைத்த-இசை உன்னதே
அதனில்-இளைப்பாறி இதத்தில் நான்-தூங்கிக் கடந்த-வாழ்வென்னதே
இந்த உலகில் இதைப்-போன்று பலருன் இசை-கேட்டு உரைப்ப..திருக்கின்றுமே
(Short Music)
சேய்கள்-மறுக்காத தாயின் பால்-போல கொடுத்த இசை-
அன்னையே
என்ன கொடுத்தும்-கிடைக்காத தாயின் மடிபோல கிடைத்த-இசை உன்னதே
அதனில்-இளைப்பாறி இதத்தில் நான்-தூங்கிக் கடந்த-வாழ்வென்னதே
இந்த உலகில் இதைப்-போன்று பலருன் இசை-கேட்டு உரைப்ப..திருக்கின்றுமே
(MUSIC)
யாரின் இசை-கொண்டு வாழத்-துணையென்று நாளைக்-கழிப்பேனய்யா
இனி-நானும் கழிப்பேனய்யா
உந்தன் இசையை உணவென்று அதனை தினம் உண்டு
வாழ்ந்து இருந்தேனய்யா .. வேறு அறியேனய்யா
உந்தன் இசையை உணவென்று அதனை தினம்-உண்டு
உந்தன் இசையை உணவென்று …
அதனை தினம்-உண்டு …
வாழ்ந்து இருந்தேனய்யா
(Short Music)
செல்வச் செழிப்பாலும் பொன்னின் பொருளாலும்
நெஞ்சில் இதம்-சேருமா
துளி என்றும் இதம் சேருமா
வாழ்வில் துன்ப நோய்-கொண்ட நெஞ்ச நிலை-மாற
மருந்து இசை தானய்யா .. உனது இசை தானய்யா
வாழ்வில் துன்ப நோய்-கொண்ட நெஞ்ச நிலை-மாற
வாழ்வில் துன்ப நோய்-கொண்ட ..
நெஞ்ச நிலை-மாற ..
மருந்துன் இசை தானய்யா
(MUSIC)
உனது இசைக் காற்றின் இதத்தில் நான்-தூங்கி நடந்த-வாழ்வென்னதே
இந்த உலகில் இதைப்-போன்று பலருன் இசை-கேட்டு உரைப்ப..திருக்கின்றுமே
(MUSIC)
தனித்து இமைமூடி உனது இசைகேட்டுக் கழித்த நாள்-கொஞ்சமா
இனமும்-புரியாத உணர்வு எனை-வந்து அமிழ்த்த இசை-தந்தவா
அமிழ்த இசை-தந்தவா
உந்தன் இசைபோல இதத்தைப் புவிமேலே கொடுக்க இனி யாரய்யா
இந்த மண்ணில் நீ-மீண்டும் பிறந்து வந்தால்தான் நடக்கும் அதுபோலய்யா
இசையின் இறைவன் நீ-தானய்யா
ம்ம்ம்..
ஆஹா ஆஹஹாஹாஹ ஆஹஹாஹாஹ ஆஹஹாஹாஹஹா
ஆஹ ஆஹஹாஹாஹஹா.. ஆஹ ஆஹஹாஹாஹஹா
No comments:
Post a Comment