Sunday, September 3, 2017

32. அழகழகான பலராகம்(ஒளிமயமான எதிர்காலம்) **

அழகழகான பல-ராகம்-இசை-வானத்தில் ஜொலிக்கிறது
(Short Music)
அவை-யாவும் மெல்லிசை மன்னரின் கையில் ஜாலம் புரிகிறது
அழகழகான பல-ராகம்-இசை வானத்தில் ஜொலிக்கிறது
(MUSIC)
நாதனின் இசையில் பாரில்-பல்-கோடி மாந்தரும்-மகிழ்கின்றார் 
இசைச் சாதனையாற்றும் நாதக்-கலைஞர் யாவரும் புகழ்கின்றார்
(1+SM+1)
மாலை சூட்டிப் புகழ்-நீராட்டி தோத்திரம் செய்கின்றார் 
ராஜ-ராஜன் இசை-மகராஜன் பாட்டினில் ஆடுகின்றார்
(Short Music)
அழகழகான பல-ராகம்-இசை வானத்தில் ஜொலிக்கிறது
(MUSIC)
இவரிசைக்கிணையே எங்கணுமில்லையே இதுநிஜமே அறிக 
அண்டம் தோன்றிடக் காரண..மாகும் ப்ரணவம் இவரிசையே அறிக 
 (1+SM+1)
இங்கிவர்-தம்மை பெற்றிட ஆன்றோர் புரிந்தனரோ தவமே
ஆத..லாலோ வந்தனள்-வாணி இவர் உருவில் புவியே
(Short Music)
அழகழகான பல-ராகம்-இசை வானத்தில் ஜொலிக்கிறது
அவை-யாவும் மெல்லிசை மன்னரின் கையில் ஜாலம் புரிகிறது
அழகழகான பல-ராகம்-இசை வானத்தில் ஜொலிக்கிறது

No comments:

Post a Comment