Tuesday, August 29, 2017

29 அம்மாடி(அம்மானை)



அம்மாடி உன்னிசையில் கண்மூடி (2)
ஆழ்ந்துவிட சுகம் மேவி
கூடி-விடும் எனை ஊடி (2)

செப்பிடச் சொல்லிலை தூரிகை
அது தீட்டிடச் சித்திரம் போலிலை 
(2)
இன்னது தான்-என சொல்லிலை
உந்தன் இன்னிசை-போலெதுமில்லையே 
(2)
அம்மாடி உன்னிசையில் கண்மூடி
ஆழ்ந்துவிட சுகம்-மேவி கூடி-விடும் எனை-ஊடி கூடி-விடும் எனை-ஊடி
 (MUSIC)
பாலையும் சுவை-தெளி தேனையும் கலந்தருந்திடத் தோன்றிடும் ஓர்சுகம்
(2)
ஆயிரம் மடங்கதைப் போலவும் ஓர்-ஓசையில் தந்திடும் உன்-ஸ்வரம்
(2)
மற்றவர்க்கே-இசைச் சாத்திரம் அது உன்னிசை வடிவினில் வாழ்ந்திடும்  (2)
உன்னிசையால் எதும் சாத்தியம் அதைச் சொல்லிட ஏதிங்கு ஓர் திறம்
(2)
அம்மாடி உன்னிசையில் கண்மூடி
ஆழ்ந்துவிட சுகம் மேவி கூடி-விடும் எனை-ஊடி கூடி-விடும் எனை-ஊடி
 (MUSIC)
உன்னிசையைப்-பண் பாடிட அதன்-பெருமையைப் பாரினில் கூறிட
நல்லிசையை-நான் தேடினேன் பின் உன்னிசையைத்-தான் நாடினேன்
உன்னிசையில்பண் படித்திட பல *சங்கதிகள் வந்து விழுந்தன
உன்னிசையே சொல் தந்திட இதில் ஒன்றுமில்லை என்  திறமென
அம்மாடி உன்னிசையில் கண்மூடி
ஆழ்ந்துவிட சுகம் மேவி கூடி-விடும் எனை-ஊடி கூடி-விடும் எனை-ஊடி


*சங்கதிகள்=விஷயங்கள். உன்னிசை மெட்டில் எழுதும்போது எல்லாமே உன் இசையே தந்துதவுகிறது. இதில் என் திறன் என்ன இருக்கிறது. நீ தானே எழுதுகிறாய் மன்னா.





3 comments:

  1. வாசங்கள் பல...உண்டு

    ரோஜா,முல்லை,மல்லி..மலர்களில்..

    மா,பலா,வாழை..பழங்களில்..

    அத்தர்,ஜவ்வாது,புணுகு..திரவியங்களில்

    இன்று..நான் வியந்தேன்'..
    நின் தேன் கவி கண்டு..

    *"பாலையும் சுவை
    தெளி தேனையும் கலந்தருந்திடத்
    தோன்றிடும் ஓர் சுகம்.."

    அதுவே மெல்லிசையின் "விசு" வாசம்..

    "ஸ்ரீநிவாசன் " துணை கொண்டு..
    இன்று போல என்றும் வாழ்க..

    ReplyDelete
  2. வாசங்கள் பல...உண்டு

    ரோஜா,முல்லை,மல்லி..மலர்களில்..

    மா,பலா,வாழை..பழங்களில்..

    அத்தர்,ஜவ்வாது,புணுகு..திரவியங்களில்

    இன்று..நான் வியந்தேன்'..
    நின் தேன் கவி கண்டு..

    *"பாலையும் சுவை
    தெளி தேனையும் கலந்தருந்திடத்
    தோன்றிடும் ஓர் சுகம்.."

    அதுவே மெல்லிசையின் "விசு" வாசம்..

    "ஸ்ரீநிவாசன் " துணை கொண்டு..
    இன்று போல என்றும் வாழ்க..

    ReplyDelete
  3. Thank you Kannan for your poetic compliments.As I said in the song MSV's tune gives the words for the song. It is divine melody...

    ReplyDelete