தேன்-போலே இனிக்கும் நல்ல-பால் போலே சுவைக்கும்
உயர்-வானோர்கள் அருந்தும்
அமுதினைப் போல-உன் மெல்லிசை ஆகிடும் (2)
ஆ .. ஆ ..
(Short Music)
நீ-போடும் இசையோடு வாழ்நாளைக் கழிப்பேன் ஐயே
உன்னுடல் போகினும் உன்னிசை வாழ்ந்திடும்
என்னோடு துணையாய் நின்றே
ஆ .. என்னோடு துணையாய் நின்றே
உன்னிசை வாழ்ந்திடும் என்னுடன் துணைவரும்
உன்னிசை வாழ்ந்திடும் என்னுடன் துணைவரும்
தேன்-போலே இனிக்கும் நல்ல-பால் போலே சுவைக்கும்
(MUSIC)
உந்தன்-இன்னிசை எங்கள்-வாழ்வினில் என்றும் ஆதரவாகும்
துன்பங்கள்-படை கொண்டே-எங்களை வந்தே-தாக்கிடும் போதும்
ஆ .. ஆ ..
என்றும்-மெய்விளை நோயால்- மக்களும் கொண்டிடுவார்-மன வாட்டம்
ஆனால்-உன்னிசை கேட்கும்-எம்மிடம் பலித்திடுமா அதன் ஆட்டம்
பூலோக வாழ்வில் துன்பங்கள் ஆறாய்
தான் வந்த போது பந்தாடும் போது
உன்னிசை வாழ்ந்திடும் எம்முடன் துணைவரும்
உன்னிசை வாழ்ந்திடும் எம்முடன் துணைவரும்
தேன்-போலே இனிக்கும் நல்ல-பால் போலே சுவைக்கும்
(MUSIC)
எங்கும்-சங்கொலி கேட்கும் வெஞ்சமர் செய்யும்-போர்க்களம் நின்று
நன்றாம்-கீதையைச் சொன்னான்-மாதவன் நின்றான்-பார்த்தனும் கேட்டு
ஓ .. ஓ
இன்றைக்கும் அதுபோலே உன்னிசை நின்றே கேட்குது நன்று
சித்தம்-வந்திடர் தந்தே-வாட்டிடும் நெஞ்சத் துயரினை-வென்று
தாருங்கள் இன்னும் என்றுள்ளம் கெஞ்சும்
கீதங்கள் தந்தே உன்னுள்ளம் கொஞ்சும்
உன்னிசை வாழ்ந்திடும் எம்முடன் துணைவரும்
உன்னிசை வாழ்ந்திடும் எம்முடன் துணைவரும்
தேன்-போலே இனிக்கும் நல்ல-பால் போலே சுவைக்கும்
(BOTH)
No comments:
Post a Comment