Monday, August 21, 2017

26 ரொம்ப நேரம் (கொஞ்ச நேரம் என்னை மறந்தேன்)


ஆ.. ஆ..
ரொம்ப-நேரம் உன்னில் திளைத்தேன் (2)
கடல் போலும்-உந்தன் இசை கேட்டும்-என்ன (2)
எந்தன்-தாகம் இன்னும் ஏனோ உந்தன்-கானம் என்ன தானோ
ரொம்ப-நேரம் உன்னில் திளைத்தேன்
ஸ்..ஆ..
 (SHORT MUSIC)
அந்தத்-தேனை இன்னும் பிழிந்தே
திரை கானம்-எனத் தரும் ஜாலம்-என்ன
உன்னைப் போலே தர-யாரோ உன்னைப் போலே இனி-யாரோ
அந்தத்-தேனை இன்னும் பிழிந்தே
ஸ்..ஆ..
 (MUSIC)
உன்-தேன் இசை தனை வாடிக்கையாக
. .ஆ..
  உன்-தேன் இசை தனை வாடிக்கையாக
கேட்டு-மகிழ்ந்தேன் கேளிக்கையாக
கேளிக்கை வேறு ஏதெனக் கூறு (2)
மன்னனுன் இசைபோல பாரினில் ஏது
அந்தத்-தேனை இன்னும் பிழிந்தே..
ஸ் ஆ..
(MUSIC)
கேட்கையில் திதிப்பாக இருப்பதை இசையாக (2) 
கொடுத்தனை மன்னா-நீ எந்நாளும் எமக்காக (2)
உன்னிசை தனை-நாளும் ஆசையில் மனம்-கேட்கும் (2)
வேலைகள் எளிதாக்கும் பாதையுன் இசையாகும் (2)
ரொம்ப-நேரம் உன்னில் திளைத்தேன் .. ஆ..
(MUSIC)
காலையில் உன்-கீதம் கேட்டதன் பின்னாலே
நாளது நலமாகப்  போகுது தன்னாலே
இசைதனில் பல-வ்யாதி போகுது எனும்-சேதி (2)
நிஜமென ஆக்கிடும் உன்னிசை புவி-மீதில் (2)

அந்தத்-தேனை இன்னும் பிழிந்தே
திரை கானம்-எனத் தரும் ஜாலம்-என்ன
உன்னைப் போலே தர-யாரோ உன்னைப் போலே இனி-யாரோ

அந்தத்-தேனை இன்னும் பிழிந்தே








No comments:

Post a Comment