Tuesday, August 8, 2017

24 ஒண்ணுக்கொண்ணு அழகு (பொன்னுக்கென்ன அழகு)



ஒண்ணுக்கொண்ணு அழகு
ஓஹோஹோ ஓஹோஹோ ஹும்
ஒவ்வொண்ணுமே அருமை
ஆஹா ஹ  ஆஹா ஹ  ஹும்
ஒண்ணுக்கொண்ணு அழகு.. 

ஆ..ஆ 
ஒவ்வொண்ணுமே அருமை.. 

ஆஆ  ஆ ..ஆஆ  ஆ
உன்-பண் எதுவும் என-உலகமும் கூறாதோ மெட்டின்-மன்னனே
ஒண்ணுக்கொண்ணு அழகு..
ஒவ்வொண்ணுமே அருமை..
(MUSIC)

இசையருள் இறையருள் உன்னிடத்தில் துலங்கிடுமே
உனதிசை திரைமிசை தருமிசை இலக்கணமே

(2)
ஒரு-எழில் கண்டதும் மறு-எழில் தோன்றிடும்
ஒண்ணுக்கொண்ணு அழகு
ஹாஹ் ...ஹா..
ஒவ்வொண்ணுமே அருமை
ஹாஆஆ  .. ஹாஆஆ
உன்-பண் எதுவும் என-உலகமும் கூறாதோ ..ஓ ..
ஒண்ணுக்கொண்ணு அழகு
ஒவ்வொண்ணுமே அருமை

(MUSIC)

என்புருகும்-வண்ணம் அரசே தந்த-மெட்டு இன்னும்
வேறு-எங்கும் போகவில்லை காதிலே ஆடுதே
தேனமுதை-மிஞ்சி அரசே தோன்றுமிசை கொஞ்சி
ஆவல்-தீர பாரின்-மீது அன்று-நீ தந்ததே

உண்டோ உனது-இசைபோல் எங்கும் நீயே-வந்து சொல்லேன்
எங்கள் ஏக்கம்-தீர ராகம் வந்தே போடு-மன்னா
ஒண்ணுக்கொண்ணு அழகு ஹாஆஆ  .. ஹாஆஆ
ஒவ்வொண்ணுமே அருமை ஹாஆஆ  .. ஹாஆஆ

(MUSIC)
ஆசைகொண்டு நெஞ்சு இசைக்கு ஏங்கி-உன்னைக் கண்டு  
மந்தி-போலே கெஞ்சிக்-கொஞ்சி என்னவோ வேண்டுதே

ஏழுசுரம்-பூட்டி அதனில் நாதக்கலை காட்டி
மன்னன்-நீயும் தந்த-நாதம் பைத்தியம் ஆக்குதே
அன்றே தந்த-நாதம் அது நன்றே-இன்றும் வாழும்
கொன்றே தின்னும்-ஆவல் அதை-நின்றே கேட்கத் தூண்டும்

ஒண்ணுக்கொண்ணு அழகு.. ஹாஆஆ ..ஆஆஆ
ஒவ்வொண்ணுமே அருமை.. ஆஆஆ ..ஆஆஆ
உன்-பண் எதுவும் என-உலகமும் கூறாதோ ..ஓ ..

ஒண்ணுக்கொண்ணு அழகு
ஒவ்வொண்ணுமே அருமை
(BOTH)





No comments:

Post a Comment