Friday, August 4, 2017

22 போடாத ராகம் உண்டோ (ஆடாத மனமும் உண்டோ)



போடாத ராகம் உண்டோ
(Short Music)
இசைக்கலங்காரமாய் அதற்குச் சிங்காரமாய்-நீயும் போடாத ராகம் உண்டோ (2)
(MUSIC)
ஜாலங்கள் வற்றாத இசைக்-கேணியில் தேவ  அமுதூற்று வெளியாக உன்-பாணியில் 
(2)
போடாத ராகம் உண்டோ
இசைக்கலங்காரமாய் அதற்குச் சிங்காரமாய்-நீயும் போடாத ராகம்-உண்டோ

(Short Music)

ஓடாது மனம்-வேறு திசைப்-பாதையில்
உன் இசை-ஓசை தருமந்த ஒரு-போதையில்
(2)
பீடேதும்-இல்லாத என்-மூளையில்
தமிழ்ப் பண்பாடும் திறம்-தந்த இசை-மேதை-நீ

(2)
போடாத ராகம் உண்டோ
(MUSIC)

மனம்-கெஞ்சும் கணமும்-அது கெஞ்சும் உனதிசையைத்-தஞ்சம் எனத்தேடியே (2)
அது என்றும் உனதிசையில்-தங்கும் எனதிடத்தில்-என்றும் திரும்..பாமலே (2)
தொல்லை-யாவும் போகும் வெறும்-பஞ்சாகவே
இசைக்-கோனே உன்னைத் துளி-கேட்டாலுமே
(2)
என்றே-கூறி உனது அமுத-இசையை-நன்கே
இன்னும் இன்னும் என்று உண்ணுகின்றேன்
என்னை மறந்து
மண்ணை மறந்து
உன்னால் தினம் பொன்னாள் என மகிழ்வுடன்
வேறேதும் வேண்டாத நிலை தன்னிலே
மனம் நிலைக்காமல் ஆனந்த கூத்தாடவே

(2)
போடாத ராகம் உண்டோ (Short Music)
இசைக்கலங்காரமாய் அதற்குச் சிங்காரமாய்-நீயும் போடாத ராகம் உண்டோ
                                                              




No comments:

Post a Comment