Monday, July 31, 2017

21 வேணுமோ இன்னும் வேணுமோ(நாணமோ இன்னும் நாணமோ) **




வேணுமோ இன்னும் வேணுமோ

என்று-கேட்டு- மெல்லிசை-மன்னர் தந்த-பாட்டைப் பாட்டினில் சொல்ல

வேணுமோ..வேணுமோ

ஓ .. ஓ ..தோணுமோ என்றும் தோணுமோ

மற்ற-வேலை செய்திடவென்றே அவர்-பாட்டைக் கேட்டதன்-பின்னே

தோணுமோ  தோணுமோ

வேணுமோ இன்னும் வேணுமோ

என்று கேட்டு-மெல்லிசை மன்னர் தந்த-பாட்டைப் பாட்டினில் சொல்ல

வேணுமோ..வேணுமோ

(MUSIC)
கேட்டது பலமுறை என்றானது என-ஆயினும் கேட்கத்-தெவிட்டாதது (2)

மேடையில்-ஆயிரம் பேரதைப்-பாடினும் கேட்டிடும் வேட்கையை உண்டாக்குது அது-மது

யார்-முயன்..றும்-கரை காணாதது அவர்-மெல்லிசை-யாருக்கும் தோன்றாதது

(1+SM+1)

வேறவர் போல்-எனக் கூறுவது ஆண்டவன் இரண்டெனக் கூறுவது போல் அது
தோணுமோ என்றும் தோணுமோ

மற்ற-வேலை செய்திடவென்றே அவர்-பாட்டைக் கேட்டதன்-பின்னே

தோணுமோ தோணுமோ

(MUSIC)
மாலையில்-கேட்டிட உண்டாக்குது-மன மயக்கத்தையே-தரும் கள்ளாகுது (2)

காலையில்-நீரினில் ஆடிடும்-வேளையில் யாவரின்-வாயிலும் பாட்டாகுது

அது இது  

கற்றோர்-மனதில் கோலோச்சுது இசை-கல்லாத பேரையும் தாலாட்டுது

 (1+SM+1)

ஆளுக்கு ஆள்-எனப் பாடுவது ஞானியின்-நெஞ்சமும் போற்றுவது அது-இது
வேணுமோ இன்னும் வேணுமோ

என்று கேட்டு- மெல்லிசை-மன்னர் தந்த-பாட்டைப் பாட்டினில் சொல்ல

வேணுமோ..வேணுமோ

ஓ .. ஓ ..தோணுமோ என்றும் தோணுமோ

மற்ற வேலை செய்திடவென்றே அவர்-பாட்டைக் கேட்டதன்-பின்னே

தோணுமோ  தோணுமோ
ஆ..ஹா ..



பிற பாடல்கள்





No comments:

Post a Comment