ஈடுனக்கு ஏதிருக்கு பாட்டெடுத்தே படிப்பதற்கு
உன் இசையைத் தவிர-எதும் வேறெனக்குத் தோன்றவில்லை
____________________
தெய்வமும் தேர்ந்தெடுத்து
கேட்டிடும்-பாரு
உன்னிசைக்..கீடு-சொல்ல
உள்ளதோ வேறு
(2)
(MUSIC)
(MUSIC)
ஆவிக்குள்-மேவி நீ-தந்த-பாட்டு கலந்தது-ஐயா
நான்-தினம் கேட்டு (2)
பேச்சுக்கும் மெட்..டமைத்தே நீ-தரும் பாட்டு
(2)
பாடித் திரிந்ததெல்லாம் இளமையில்-நேற்று
இனி அது ஏது ..!
தெய்வமும் தேர்ந்தெடுத்து
கேட்டிடும்-பாரு
உன்னிசைக்..கீடு-சொல்ல
உள்ளதோ வேறு
(MUSIC)
நீ-அன்று போட்ட மெட்டு இன்றைக்கும்-இருக்கு
என்றைக்கும் நிலைக்குமய்யா சுகந்தத்தைக்
கொடுத்து
மாளிகை வீட்டில்-இல்லை ஏழ்மையில்-பிறப்பு
ஆயினும் மெல்லிசைக்கோ கோனெனும் சிறப்பு
வேறெவர்க்கிருக்கு
தெய்வமும் தேர்ந்தெடுத்து
கேட்டிடும்-பாரு
உன்னிசைக்..கீடு-சொல்ல
உள்ளதோ வேறு
(MUSIC)
ஐந்தினில் அருந்தி-வந்தேன் உன்னிசைப் பாலாய்
ஐம்பதின் பின்னும்-அதை அருந்துகிறேன் நான்
(2)
மன்னவனே-உனது இசை-மழை பாறை (2)
தனில்-விழுந்தாலும் அதில் தளிர்-விடும்
வேரே
துளி-விழுந்தாலும் அதில் தளிர்-விடும்
வேரே
தெய்வமும் தேர்ந்தெடுத்து
கேட்டிடும்-பாரு
உன்னிசைக்..கீடு-சொல்ல
உள்ளதோ வேறு
No comments:
Post a Comment