Tuesday, April 11, 2017

20 தெய்வமே தேர்ந்தெடுத்து (தெய்வத்தின் தேர்தெடுத்து)



ஈடுனக்கு ஏதிருக்கு பாட்டெடுத்தே படிப்பதற்கு
உன் இசையைத் தவிர-எதும் வேறெனக்குத் தோன்றவில்லை
____________________

தெய்வமும் தேர்ந்தெடுத்து கேட்டிடும்-பாரு
உன்னிசைக்..கீடு-சொல்ல உள்ளதோ வேறு
(2)
(MUSIC)
ஆவிக்குள்-மேவி நீ-தந்த-பாட்டு கலந்தது-ஐயா நான்-தினம் கேட்டு (2)
பேச்சுக்கும் மெட்..டமைத்தே நீ-தரும் பாட்டு (2)
பாடித் திரிந்ததெல்லாம் இளமையில்-நேற்று இனி அது ஏது ..!
தெய்வமும் தேர்ந்தெடுத்து கேட்டிடும்-பாரு
உன்னிசைக்..கீடு-சொல்ல உள்ளதோ வேறு
(MUSIC)
நீ-அன்று போட்ட மெட்டு இன்றைக்கும்-இருக்கு
என்றைக்கும் நிலைக்குமய்யா சுகந்தத்தைக் கொடுத்து
மாளிகை வீட்டில்-இல்லை ஏழ்மையில்-பிறப்பு
ஆயினும் மெல்லிசைக்கோ கோனெனும் சிறப்பு வேறெவர்க்கிருக்கு
தெய்வமும் தேர்ந்தெடுத்து கேட்டிடும்-பாரு
உன்னிசைக்..கீடு-சொல்ல உள்ளதோ வேறு
 (MUSIC)
ஐந்தினில் அருந்தி-வந்தேன் உன்னிசைப் பாலாய்
ஐம்பதின் பின்னும்-அதை அருந்துகிறேன் நான்
(2)
மன்னவனே-உனது இசை-மழை பாறை (2)
தனில்-விழுந்தாலும் அதில் தளிர்-விடும் வேரே
துளி-விழுந்தாலும் அதில் தளிர்-விடும் வேரே
தெய்வமும் தேர்ந்தெடுத்து கேட்டிடும்-பாரு
உன்னிசைக்..கீடு-சொல்ல உள்ளதோ வேறு




Friday, April 7, 2017

19 இசைப் பாட்டால்(இசை கேட்டால் புவி அசைந்தாடும்) **



Dedicated to M.S.V
M.S.V. எனும் ஒரு சகாப்தம்
(24 June 1928 – 14 July 2015)

Thanks to Ullagaram Ravi for beautifully singing this song.
Please visit his youtube channel for his Karaoke songs.
_____________________________

ஆ ..ஆ ..  ஆ ..
இசைப் பாட்டால் மனம்-வசமாக்கும் கலை என்றும் நினதாகும்
(1+SM+1)
வேண்டாம்-உணவும் வேண்டாம்-உறக்கம்
என்று-உன் இசை-கேட்கும் நிலை-என்னிடம் உருவாகும்
வெறி- என்றிட உருவாகும்
இசைப் பாட்டால் மனம் வசமாக்கும் கலை என்றும் நினதாகும்
(MUSIC)
நல்-பாடல் திரைமீது பலர்-போடலாம்
அதை-நாட்டில் பலர்-கேட்டு மகிழ்வாகலாம்
(2)
விண்மீன்கள் பல-வானில் ஒளி வீசலாம் (2)
என்றாலும் நிலவொன்று வான்மீதிலே 
எக்காலும் நிலவே நீ இசை வானிலே 
வேண்டாம்-உணவும் வேண்டாம்-உறக்கம்
என்று-உன் இசை-கேட்கும் நிலை-என்னிடம் உருவாகும்
வெறி-என்றிட உருவாகும்
(MUSIC)
*இனி-ஏது இது போல-ராகங்களை மெருகேற்றி நீ-போட்ட பாடல்களே
மொழி-தாண்டி கேட்கும் உன்-கீதங்களை (2)
கேட்போரும் பணிவார்-உன் பாதங்களை (2)
(Short Music)
கத்தும் கடலலை மண்ணில் உள்ளவரை
உந்தன் இசையுடன் பாடல் கேட்டு-வரும் பார் மீதிலே
(Short Music)
உந்தன் இசையுடன் பாடல் கேட்ட பின்னர்
இன்னும் பிற-இசை கேட்கத் தோன்றவில்லை பார்-மீதிலே
(Short Music)
மண்ணே அழிவுறும் காலம்-வந்திடினும்  
என்றும் இசையுடன் வானில் வாழுமுந்தன் கீதங்களே
கீதங்களே..கீதங்களே .. கீதங்களே..கீதங்களே
இசைப் பாட்டால் மனம் வசமாக்கும் கலை என்றும் நினதாகும்


*பிலாஸ்கானி தோடி என்ற ஹிந்துஸ்தானி ராகத்தில் அமைந்தது  இந்த பாடல். தான்சேன் இறந்த சோகம் தாளாமல்அவரின் மகன் பிலாஸ்கான் , புதிதாக இயற்றி இந்த ராகத்தை இசைத்தார்.அப்போது இறந்த தான்ஸேனின் கரம் உயர்ந்து அவரைப் பாராட்டியது என்று கதை உண்டு.