Thursday, March 2, 2017

18 அருமையிலும் அருமை(பரமசிவன் கழுத்திலிருந்து) **



Dedicated to M.S.V
M.S.V. எனும் ஒரு சகாப்தம்
(24 June 1928 – 14 July 2015)

Thanks to Ullagaram Ravi for beautifully singing this song.
Please visit his youtube channel for his Karaoke songs.
_____________________________

அருமையிலும் அருமை-என்றுன் இசையைச் சொல்வது
இசையின் மன்னவா
(2)
நாலும்-கேட்டுப் பார்த்து முடிவு-செய்தே நானா-சொன்னது
உலகம்-சொல்லுது அதில் சத்யம் உள்ளது
(MUSIC)
உயர்ந்த-இசையைக் குறிக்கும்போது உலகம்-உன்னை  உரைக்கும்
உன் இசையைக்-கேட்டு வளர்ந்ததனால் *எனக்கும்-கூட உரைக்கும்
உயர்ந்த இசையைக் குறிக்கும்போது உலகம்-உன்னை உரைக்கும்
உன் இசையைக்-கேட்டு வளர்ந்ததனால் எனக்கும்-கொஞ்சம் உரைக்கும்
சரி..க..ம பத..நி-என ஸ்வரம்ஏ-ழைக் கொண்டு ராகம்-என்ற சரம்-தொடுத்து நன்றே-தந்தது
நீ அன்றே-தந்தது அது இன்றும்-உள்ளது
அருமையிலும் அருமை-என்றுன் இசையைச் சொல்வது
இசையின் மன்னவா
நாலும்-கேட்டுப் பார்த்து முடிவு-செய்தே நானா-சொன்னது
உலகம்-சொல்லுது அதில் சத்யம் உள்ளது
(MUSIC)
மீண்டும்-மீண்டும் கேட்டிடவே தோன்றும்-என்றும் யார்க்கும்
உந்தன் இசையில்-லயித்து அமர்ந்து-விட்டால் உலகம்-மறந்து போகும்
உனைப்போலே கொடுப்பாரோ இசை-யாரும் மீண்டும்
என-நாளும் என்-பாழும் நெஞ்சம்-ஏங்குது
அது தினமும்-ஏங்குது பெரும் துக்கம்-கொண்டது
அருமையிலும் அருமை-என்றுன் இசையைச் சொல்வது
இசையின் மன்னவா
நாலும்-கேட்டுப் பார்த்து முடிவு-செய்தே நானா-சொன்னது
உலகம்-சொல்லுது அதில் சத்யம் உள்ளது
 (MUSIC)
சோறு-திங்கத் ததிங்கிணத்தோம் தாளம் தான்-முன்..னாலே
அதைத் திங்க-நேரம் இல்லை-உன்னை சந்தித்த-பின்..னாலே
சோறுதிங்கத் ததிங்கிணத்தோம் தாளம் தான்-முன்..னாலே
அதைத் திங்க-நேரம் இல்லை- உந்தன் உதவியால்-பின்..னாலே
என-உள்ளம் பலர்-முன்னே வாலி நெகிழ்ந்த-போது
அடடா-நான் அறிந்தேன்-உன் உள்ளத்தை அன்று
அது கருணை கொண்டது அதில் தெய்வம் உள்ளது
அருமையிலும் அருமை-என்றுன் இசையைச் சொல்வது
இசையின் மன்னவா
நாலும்-கேட்டுப் பார்த்து முடிவு-செய்தே நானா-சொன்னது
உலகம்-சொல்லுது அதில் சத்யம் உள்ளது


*எனக்கும்-கூட உரைக்கும் =இசைஞான சூனியமான என் புத்திக்கும்  கூட உன் பெருமை உரைக்கும் 


பிற பாடல்கள்