Tuesday, February 7, 2017

16 உன்னிசையில் முங்கித் திளைத்தேன்(உன்னிடத்தில் என்னைக் கொடுத்தேன்)


Dedicated to M.S.V



M.S.V. எனும் ஒரு சகாப்தம்
(24 June 1928 – 14 July 2015)



உன்னிசையில் முங்கித் திளைத்தேன்
அந்த மெல்லிசையில் என்னை மறந்தேன்
(2)
இசையினில் ஒரு-தோடி நீ தந்தது பல-கோடி (2)
உன்னிசையில் முங்கித் திளைத்தேன்
அந்த மெல்லிசையில் என்னை மறந்தேன்
(MUSIC)
காதில் பெய்த-தேனாய் உந்தன் இசையே பாயுது (2)
சாதல் வென்று தானே பாரில் இன்னும் வாழுது (2)
இசைவுடன் இசை-பாட நீ இசைத்தது போலேது
நினைத்தால் போதும் உடனே ஆ கொடுத்தாய் பாடல் இசையே
உன்னிசையில் முங்கித் திளைத்தேன்
அந்த மெல்லிசையில் என்னை மறந்தேன்
(MUSIC)
துன்பம் வந்த-நேரம் உந்தன் ராகம்-கேட்டது
சோகம் கொண்ட-நெஞ்சம் மெல்ல இன்பம்-கண்டது  
*இனி அந்த இசையேது இன்று புதிதென அது-ஏது
பகலிர..வும்-உன் இசையே ஆ .. கேட்பேன் மறப்பேன் எனையே
உன்னிசையில் முங்கித் திளைத்தேன்
அந்த மெல்லிசையில் என்னை மறந்தேன்
(MUSIC)
பாடல் செய்யும் ஆசை எந்தன் நெஞ்சைத் தின்றது (2)
**நானும் செய்த-பாட்டை உந்தன் இசையே-தந்தது (2)
உன்னரும் இசை-போட்டு இன்று வந்திடும் என்-பாட்டு
காலையும் மாலையும் ஐயே ஆ நான் செய்யும் பூஜையும் அதுவே
உன்னிசையில் முங்கித் திளைத்தேன்
அந்த மெல்லிசையில் என்னை மறந்தேன்
இசையினில் ஒரு-தோடி நீ தந்தது பல-கோடி
உன்னிசையில் முங்கித் திளைத்தேன்
அந்த மெல்லிசையில் என்னை மறந்தேன்


*நீ மறைந்த பிறகு புதிது புதிதாகத் தோன்றும் உன் இசை ஏது

** உன்னிசைக்கு நான் பாட்டு எழுத முயலும்போது, உன் இசையே வார்த்தைகளை எடுத்துக் கொடுத்தது. அதிலும் உன் திறன் தான்,என் திறன் ஏதுமில்லை.




No comments:

Post a Comment