Sunday, February 5, 2017

15 யார் இருக்கார்(பூ முடிப்பாள்)



Dedicated to M.S.V
M.S.V. எனும் ஒரு சகாப்தம்
(24 June 1928 – 14 July 2015)

Thanks to Ullagaram Ravi for beautifully singing this song.
Please visit his youtube channel for his Karaoke songs.
_____________________________


யார் இருக்கார் உன்னைப் போல்-உலகில்
எவர்-பாய்ச்..சிடுவார் இசைத்-தேன் செவியில்
(1+SM+1)
பாடலிலே உன்னை-நான் வழுத்தி  (2)
சொல்லி-ஆகிடுமோ என்றும்-நான் எழுத்தில் (2)
யார் இருக்கார் உன்னைப் போல்-உலகில்
எவர்-பாய்ச்..சிடுவார் இசைத்-தேன் செவியில்
(MUSIC)
உன்னிசைப் படங்களைச் சென்று-நான் தேடி 
பார்த்த-நல்-காலம் மனம்-நிழலாடி
(2)
தந்திடுதே-அந்த ஏக்கத்தைப் பாட்டில் (2)
பாடிடுவோர் என்போல்-ஆயிரம் நாட்டில் (2)
யார் இருக்கார் உன்னைப் போல்-உலகில்
எவர்-பாய்ச்..சிடுவார் இசைத்-தேன் செவியில்
(MUSIC)
தினமும் காதினில்-வந்து தேனினும்-இனிய அமுதமாய்ப்-பாய் 
இசையினை-யாரோ கேளாதவரும் இனிமைமையை யாரோ புகழாதவரும் 
திரையினில்  தமிழ்-மெல்..லிசைக்கு சீரும் சிறப்பும்-சேர்த்ததற்குப்-
பீடு-கொண்டு சேர்த்தவனே
உந்தன் மெல்லிசையைச் சொல்வார்
*இப்பாலும் அப்பாலும் எப்பாலும்
(MUSIC)
பாடடா-என்று என்-நெஞ்சு துளைத்தெடுக்க (SM)
ஓர் பிள்ளை போல்-இன்று ஏதேதோ கிறுக்கி வர (SM)
போதுமா-என்று நான்-பின்னர் கேட்டு விட (SM)
சொல்லியது-தூசே என்று-நெஞ்சம் கேலி-செய்ய (SM)
நாளும் உனது இசை ஆறு-எனப் பெருக்கெடுக்க (SM)
ஆவன்னா கற்றிடும்-ஓர் சேய்-போல் நான்-விழிக்க (SM)
கொட்டியதுன் பாடல் (SM)
இனித்தது காதுகளில்  (SM)
பாட்டினால்  உன்-மேன்மை உரைப்பேனே பெருமானே தினம் நானே
(MUSIC)
பைத்தியம் ஆனேன்-உன் மெல்லிசை மேலே
அதைத்தினம்-கேட்பது தான்-எந்தன் வேலை
(1+SM+1)
மனம்-பல துயர்-கொண்டு ஒட்டுது-நாளை (2)
ஆறுதலோ-உந்தன் பாட்டெனும் சோலை (2)

யார் இருக்கார் உன்னைப் போல்-உலகில்
எவர்-பாய்ச்..சிடுவார் இசைத்-தேன் செவியில்
என் பாடலிலே உனை-நான் வழுத்தி
சொல்லி-ஆகிடுமோ என்றும்-நான் எழுத்தில்

என்றும்-நான் எழுத்தில் என்றும்-நான் எழுத்தில்


*எப்பாலும் நின்அன்பர் எல்லாம் கூடி ஏத்துகின்றார் நின்பதத்தை--வள்ளலார்
மூன்றாகிய கண்களையுடைய இறைவனே, எனக்கப்பனே, எனது அரிய உயிர்க்கு ஒப்பற்ற துணைவனே, எப்பக்கம் நோக்கினும் நின்னுடைய மெய்யன்பர் எல்லாரும் சேர்ந்து நின் திருவடிகளைப் போற்றுகின்றார்கள்;





பிற பாடல்கள்


2 comments:

  1. These songs deeply move our hearts. M.S. V. lives on in the minds of the current teenagers!

    ReplyDelete
  2. அருமை
    அற்புதமான கருத்துக்களுடன்...
    நன்றிகள்

    ReplyDelete