Sunday, February 5, 2017

12 என்னவென்று கூறிடுவேன் ( அந்தரங்கம் நானறிவேன்)



Dedicated to M.S.V



M.S.V. எனும் ஒரு சகாப்தம்
(24 June 1928 – 14 July 2015)


என்னவென்று கூறிடுவேன்  சொல்ல-ஒன்றும் தோணலையே
உன்ஸ்வரத்தில் நான் விழுந்தேன் போதையுடன் தான் இருந்தேன் (2)
சொல்லும்மொழி தான்மறந்தேன் மன்னன்-உந்தன் தேனிசையால் (2)
என்னவென்று-கூறிடுவேன்  சொல்ல-ஒன்றும் தோணலையே
(MUSIC)
காதில்-உந்தன் இசை-விழுந்து மூடிக் கொண்ட கண்கள்
இது நாள்-வரையில் திறக்கவில்லை ஆஹா-இன்பத் தென்றல்
(2)
இதுவரையில் யாரிடமும் கேட்கவில்லை நாங்கள் (2)
இசை-போடும் சரஸ்வதி-தான் பாடல்தரும் நீங்கள்
ஏன் மன்னவா மண்ணில்-என்னவாம் ?
விண்ணில் சென்றவா விண்ணை வெல்லவா ?
என்னவென்று கூறிடுவேன்  சொல்ல ஒன்றும் தோணலையே
(MUSIC)
மீறுகிற துயர்-எழுந்தும் நெஞ்சில்-இதம் மேவி
சுகம் காணும்-விதம் இசை-கொடுக்கும் நீதான் இசைச் சாமி
(2)
இதுவரையில் காணவில்லை இனியும்-எப்..போதும் (2)
காண்போமா உன்னிசைபோல் *எனக்கில்லை-ச..ந்தேகம்
ஏன் மன்னவா மண்ணில்-என்னவாம் ?
விண்ணில் சென்றவா விண்ணை வெல்லவா ?
என்னவென்று கூறிடுவேன்  சொல்ல-ஒன்றும் தோணலையே
என்னவென்று கூறிடுவேன்  சொல்ல-ஒன்றும் தோணலையே



*எனக்கில்லை-ச..ந்தேகம்=உன்னிசை போல வேறு கேட்க மாட்டோம் என்பதில் எனக்கில்லை சந்தேகம்




No comments:

Post a Comment