Tuesday, February 14, 2017

17 நொந்த இதயத்தின் உள்ளே (தங்கப்பதக்கத்தின் மேலே)


Dedicated to M.S.V



M.S.V. எனும் ஒரு சகாப்தம்
(24 June 1928 – 14 July 2015)



நொந்த-இதயத்தின் உள்ளே
 சென்று அங்கு-தன் மெல்லிசையாலே
தந்த மெட்டுக்கள் நன்-மருந்தாமே 
என்று இட்டுத் தான் கொண்டிடுவாரோ
நீயும் மெட்டு-மருத்துவக்கோனோ
ஆ...
நொந்த-இதயத்தின் உள்ளே
 சென்று அங்கு-தன் மெல்லிசையாலே
தந்த மெட்டுக்கள் நன்-மருந்தாமே 
என்று இட்டுத் தான் கொண்டிடுவாரோ
நீயும் மெட்டு-மருத்துவக்கோனோ
(MUSIC)
என்றைக்கும் மெல்லிசைத் தேனைச்-சுரந்து மெட்டுக்களில்-நீ தந்து (2)
ஒரு கோடி-உண்ணும் ஆசை-இன்னும் எந்தன்-மனதினில் உண்டு (2)
அழகுத்-தமிழில் உனது-இசையை எழுத-வந்தேனே
உனது-இசையில் மயங்கி-எழுத மறந்து-நின்றேனே
நொந்த இதயத்தின் உள்ளே 
 சென்று அங்கு-தன் மெல்லிசையாலே
தந்த மெட்டுக்கள் நன்-மருந்தாமே 
என்று இட்டுத் தான் கொண்டிடுவாரோ
நீயும் மெட்டு-மருத்துவக் கோனோ
(MUSIC)
எக்காலும்-மக்காத மெட்டைப்-புனைந்து என்றும்-கொடுத்ததன் பின்னே (2)
அதில்-ஏதுமில்லை எந்தன்-திறமை என்ற-எளிமையும் என்னே (2)
புவியும்-எளிமை தனக்கு-உவமை உனை-உரைக்காதோ
இறையும்-உந்தன் இசையைக்-கேட்கப் புவி இரங்காதோ
நொந்த இதயத்தின் உள்ளே 
 சென்று அங்கு-தன் மெல்லிசையாலே
தந்த மெட்டுக்கள் நன்-மருந்தாமே 
என்று இட்டுத் தான் கொண்டிடுவாரோ
நீயும் மெட்டு-மருத்துவக் கோனோ
(MUSIC)
புத்திக்கு-எட்டாத உந்தன்-இசையை புத்தி-தொடர்வது என்ன
(MUSIC)
புத்திக்கு-எட்டாத உந்தன்-இசையை பற்றித்தொ-டர்வது என்ன
அந்தி மாலைப்-பொழுதும் காலை-முழுதும் கேட்க-அலைவதுமென்ன (2)
ஊனும்-உணர்வும் மறையும்-வரையில் உந்தன் மெட்டோடு (2)
இசைக் கோனுன்-தாளில் பூவைப்-போல விழுமெந்தன் பாட்டு (2)
நொந்த இதயத்தின் உள்ளே 
 சென்று அங்கு-தன் மெல்லிசையாலே
தந்த மெட்டுக்கள் நன்-மருந்தாமே 
என்று இட்டுத் தான் கொண்டிடுவாரோ
நீயும் மெட்டு-மருத்துவக் கோனோ



பிற பாடல்கள்

Tuesday, February 7, 2017

16 உன்னிசையில் முங்கித் திளைத்தேன்(உன்னிடத்தில் என்னைக் கொடுத்தேன்)


Dedicated to M.S.V



M.S.V. எனும் ஒரு சகாப்தம்
(24 June 1928 – 14 July 2015)



உன்னிசையில் முங்கித் திளைத்தேன்
அந்த மெல்லிசையில் என்னை மறந்தேன்
(2)
இசையினில் ஒரு-தோடி நீ தந்தது பல-கோடி (2)
உன்னிசையில் முங்கித் திளைத்தேன்
அந்த மெல்லிசையில் என்னை மறந்தேன்
(MUSIC)
காதில் பெய்த-தேனாய் உந்தன் இசையே பாயுது (2)
சாதல் வென்று தானே பாரில் இன்னும் வாழுது (2)
இசைவுடன் இசை-பாட நீ இசைத்தது போலேது
நினைத்தால் போதும் உடனே ஆ கொடுத்தாய் பாடல் இசையே
உன்னிசையில் முங்கித் திளைத்தேன்
அந்த மெல்லிசையில் என்னை மறந்தேன்
(MUSIC)
துன்பம் வந்த-நேரம் உந்தன் ராகம்-கேட்டது
சோகம் கொண்ட-நெஞ்சம் மெல்ல இன்பம்-கண்டது  
*இனி அந்த இசையேது இன்று புதிதென அது-ஏது
பகலிர..வும்-உன் இசையே ஆ .. கேட்பேன் மறப்பேன் எனையே
உன்னிசையில் முங்கித் திளைத்தேன்
அந்த மெல்லிசையில் என்னை மறந்தேன்
(MUSIC)
பாடல் செய்யும் ஆசை எந்தன் நெஞ்சைத் தின்றது (2)
**நானும் செய்த-பாட்டை உந்தன் இசையே-தந்தது (2)
உன்னரும் இசை-போட்டு இன்று வந்திடும் என்-பாட்டு
காலையும் மாலையும் ஐயே ஆ நான் செய்யும் பூஜையும் அதுவே
உன்னிசையில் முங்கித் திளைத்தேன்
அந்த மெல்லிசையில் என்னை மறந்தேன்
இசையினில் ஒரு-தோடி நீ தந்தது பல-கோடி
உன்னிசையில் முங்கித் திளைத்தேன்
அந்த மெல்லிசையில் என்னை மறந்தேன்


*நீ மறைந்த பிறகு புதிது புதிதாகத் தோன்றும் உன் இசை ஏது

** உன்னிசைக்கு நான் பாட்டு எழுத முயலும்போது, உன் இசையே வார்த்தைகளை எடுத்துக் கொடுத்தது. அதிலும் உன் திறன் தான்,என் திறன் ஏதுமில்லை.




Sunday, February 5, 2017

15 யார் இருக்கார்(பூ முடிப்பாள்)



Dedicated to M.S.V
M.S.V. எனும் ஒரு சகாப்தம்
(24 June 1928 – 14 July 2015)

Thanks to Ullagaram Ravi for beautifully singing this song.
Please visit his youtube channel for his Karaoke songs.
_____________________________


யார் இருக்கார் உன்னைப் போல்-உலகில்
எவர்-பாய்ச்..சிடுவார் இசைத்-தேன் செவியில்
(1+SM+1)
பாடலிலே உன்னை-நான் வழுத்தி  (2)
சொல்லி-ஆகிடுமோ என்றும்-நான் எழுத்தில் (2)
யார் இருக்கார் உன்னைப் போல்-உலகில்
எவர்-பாய்ச்..சிடுவார் இசைத்-தேன் செவியில்
(MUSIC)
உன்னிசைப் படங்களைச் சென்று-நான் தேடி 
பார்த்த-நல்-காலம் மனம்-நிழலாடி
(2)
தந்திடுதே-அந்த ஏக்கத்தைப் பாட்டில் (2)
பாடிடுவோர் என்போல்-ஆயிரம் நாட்டில் (2)
யார் இருக்கார் உன்னைப் போல்-உலகில்
எவர்-பாய்ச்..சிடுவார் இசைத்-தேன் செவியில்
(MUSIC)
தினமும் காதினில்-வந்து தேனினும்-இனிய அமுதமாய்ப்-பாய் 
இசையினை-யாரோ கேளாதவரும் இனிமைமையை யாரோ புகழாதவரும் 
திரையினில்  தமிழ்-மெல்..லிசைக்கு சீரும் சிறப்பும்-சேர்த்ததற்குப்-
பீடு-கொண்டு சேர்த்தவனே
உந்தன் மெல்லிசையைச் சொல்வார்
*இப்பாலும் அப்பாலும் எப்பாலும்
(MUSIC)
பாடடா-என்று என்-நெஞ்சு துளைத்தெடுக்க (SM)
ஓர் பிள்ளை போல்-இன்று ஏதேதோ கிறுக்கி வர (SM)
போதுமா-என்று நான்-பின்னர் கேட்டு விட (SM)
சொல்லியது-தூசே என்று-நெஞ்சம் கேலி-செய்ய (SM)
நாளும் உனது இசை ஆறு-எனப் பெருக்கெடுக்க (SM)
ஆவன்னா கற்றிடும்-ஓர் சேய்-போல் நான்-விழிக்க (SM)
கொட்டியதுன் பாடல் (SM)
இனித்தது காதுகளில்  (SM)
பாட்டினால்  உன்-மேன்மை உரைப்பேனே பெருமானே தினம் நானே
(MUSIC)
பைத்தியம் ஆனேன்-உன் மெல்லிசை மேலே
அதைத்தினம்-கேட்பது தான்-எந்தன் வேலை
(1+SM+1)
மனம்-பல துயர்-கொண்டு ஒட்டுது-நாளை (2)
ஆறுதலோ-உந்தன் பாட்டெனும் சோலை (2)

யார் இருக்கார் உன்னைப் போல்-உலகில்
எவர்-பாய்ச்..சிடுவார் இசைத்-தேன் செவியில்
என் பாடலிலே உனை-நான் வழுத்தி
சொல்லி-ஆகிடுமோ என்றும்-நான் எழுத்தில்

என்றும்-நான் எழுத்தில் என்றும்-நான் எழுத்தில்


*எப்பாலும் நின்அன்பர் எல்லாம் கூடி ஏத்துகின்றார் நின்பதத்தை--வள்ளலார்
மூன்றாகிய கண்களையுடைய இறைவனே, எனக்கப்பனே, எனது அரிய உயிர்க்கு ஒப்பற்ற துணைவனே, எப்பக்கம் நோக்கினும் நின்னுடைய மெய்யன்பர் எல்லாரும் சேர்ந்து நின் திருவடிகளைப் போற்றுகின்றார்கள்;





பிற பாடல்கள்


14 எம்.எஸ்.வி என்னும் மூன்றெழுத்து (தேவியர் இருவர் முருகனுக்கு)


Dedicated to M.S.V



M.S.V. எனும் ஒரு சகாப்தம்
(24 June 1928 – 14 July 2015)


எம்.எஸ்.வி என்னும் மூன்றெழுத்து அதில்-தான் தமிழ்த்-திரை இசையிருக்கு
(1+SM+1)
நீயிதைத்-தோழி அறியாயோ இசைக்கோர்-தெய்வம் அறியாயோ
இசை-ஓர் தெய்வம் அறியாயோ
(MUSIC)
ஆ ..ஆ..
இசையினிலே-அவர் தனை-மறப்பார் கைவிரலில்-அவர் இசை-படிப்பார்
(2)
இசையினை வெல்லமென அவர்-அளித்தார்
சொல்லோடு அதை அவர் இணைத்துத் தந்தார்
(2)
எம்.எஸ்.வி என்னும் மூன்றெழுத்து அதில்-தான் தமிழ்த்-திரை இசையிருக்கு
நீயிதைத்-தோழி அறியாயோ இசைக்கோர்-தெய்வம் அறியாயோ
இசை-ஓர் தெய்வம் அறியாயோ
(MUSIC)
ஆ ..ஆ..
(MUSIC)
அறிமுகம் அவருக்கு-ஏதுக்கடி *இசைமுகம் நனறாய் விளங்குமடி
பெரும்-இதம் இசையாய்க் கொடுத்தபடி எந்நேரம்-உள்ளார் தனை மறந்தபடி
எம்.எஸ்.வி என்னும் மூன்றெழுத்து அதில்-தான் தமிழ்த்-திரை இசையிருக்கு
நீயிதைத்-தோழி அறியாயோ இசைக்கோர்-தெய்வம் அறியாயோ
இசை-ஓர் தெய்வம் அறியாயோ




*இசை வழியாக தமிழ்த் திரை உலகம் மட்டுமல்லாமல் இந்தியத் திரையுலகத்திருக்கும், இசையுலகத்துக்கும் அறிமுகமானவர்


பிற பாடல்கள்


13 பேசுவது சரியா(பேசுவது கிளியா)



Dedicated to M.S.V



M.S.V. எனும் ஒரு சகாப்தம்
(24 June 1928 – 14 July 2015)


பேசுவது-சரியா உன்னை எந்தன்-கவி வழியாய் (2)
வாயில்-வந்த மொழியால் எந்தன்-தமிழ் வழியாய்
பேசுவது-சரியா எந்தன்-கவி வழியாய்
(SM)
மூடன்-எனை-அறியாப் பிள்ளை என்று-எண்ணி-விடுவாய் (2)
வேறெனக்கு வழியாய்த் தெரியவில்லை பொறுப்பாய்
மூடன்-எனை-அறியாப்-பிள்ளை என்று-எண்ணி விடுவாய்
வேறெனக்கு வழியாய்த் தெரியவில்லை பொறுப்பாய்
மூடன்-எனை-அறியாப்-பிள்ளை என்று-எண்ணி விடுவாய்
(MUSIC)
பின்னாலே வந்தனர்-நூறு ஆயிரம்-பேர் ஐயா
எல்லாரும் குருவெனச்-சொன்னார் உந்தனின்-பேர்
(1+SM+1)
சொல்வேந்தர் பாவலர்-சொன்னார் பேரறியாப் பேர்களும்-சொன்னார்
(2)
எல்லாரும் சொன்னதைக் கவியில் சொல்ல-வந்தேனே தமிழினில் நானாய்
பேசுவது-சரியா உன்னை எந்தன்-கவி வழியாய்
வாயில்-வந்த மொழியால் எந்தன்-தமிழ் வழியாய்
மூடன்-எனை-அறியாப்-பிள்ளை என்று-எண்ணி விடுவாய்
(MUSIC)
மன்னாதி மன்னரென்றாலாது நீ மட்டும்-தான்
என்றும் அப்பட்டம் வேறெவருக்கும் பொருந்திடுமா
ஐயா-நீ மழை பொழிந்தாயா தெய்வீக இசை-பொழிந்தாயா
என்ரூரே போற்றும்-உன்னை நானும்-கொஞ்சம் பா டிடலாமா
மூடன்-எனை-அறியாப்-பிள்ளை என்று-எண்ணி விடுவாய்
வேறெனக்கு வழியாய்த் தெரியவில்லை பொறுப்பாய்
பேசுவது-சரியா உன்னை எந்தன்-கவி வழியாய்

வாயில்-வந்த மொழியால் எந்தன்-தமிழ் வழியாய்




12 என்னவென்று கூறிடுவேன் ( அந்தரங்கம் நானறிவேன்)



Dedicated to M.S.V



M.S.V. எனும் ஒரு சகாப்தம்
(24 June 1928 – 14 July 2015)


என்னவென்று கூறிடுவேன்  சொல்ல-ஒன்றும் தோணலையே
உன்ஸ்வரத்தில் நான் விழுந்தேன் போதையுடன் தான் இருந்தேன் (2)
சொல்லும்மொழி தான்மறந்தேன் மன்னன்-உந்தன் தேனிசையால் (2)
என்னவென்று-கூறிடுவேன்  சொல்ல-ஒன்றும் தோணலையே
(MUSIC)
காதில்-உந்தன் இசை-விழுந்து மூடிக் கொண்ட கண்கள்
இது நாள்-வரையில் திறக்கவில்லை ஆஹா-இன்பத் தென்றல்
(2)
இதுவரையில் யாரிடமும் கேட்கவில்லை நாங்கள் (2)
இசை-போடும் சரஸ்வதி-தான் பாடல்தரும் நீங்கள்
ஏன் மன்னவா மண்ணில்-என்னவாம் ?
விண்ணில் சென்றவா விண்ணை வெல்லவா ?
என்னவென்று கூறிடுவேன்  சொல்ல ஒன்றும் தோணலையே
(MUSIC)
மீறுகிற துயர்-எழுந்தும் நெஞ்சில்-இதம் மேவி
சுகம் காணும்-விதம் இசை-கொடுக்கும் நீதான் இசைச் சாமி
(2)
இதுவரையில் காணவில்லை இனியும்-எப்..போதும் (2)
காண்போமா உன்னிசைபோல் *எனக்கில்லை-ச..ந்தேகம்
ஏன் மன்னவா மண்ணில்-என்னவாம் ?
விண்ணில் சென்றவா விண்ணை வெல்லவா ?
என்னவென்று கூறிடுவேன்  சொல்ல-ஒன்றும் தோணலையே
என்னவென்று கூறிடுவேன்  சொல்ல-ஒன்றும் தோணலையே



*எனக்கில்லை-ச..ந்தேகம்=உன்னிசை போல வேறு கேட்க மாட்டோம் என்பதில் எனக்கில்லை சந்தேகம்




11 தேன் மழை போலே (பூமழை தூவி) **





Dedicated to M.S.V
M.S.V. எனும் ஒரு சகாப்தம்
(24 June 1928 – 14 July 2015)

Thanks to Ullagaram Ravi for beautifully singing this song.
Please visit his youtube channel for his Karaoke songs.
_____________________________


தேன் மழை-போலே இனித்தெங்கள்-காதில் உன்..னிசை பொழிகின்றது
இசை தந்திடச்-சாமி உந்தனை பூமியில் வாழ்-எனப் படைத்திட்டது
எங்..களின் பாக்..கியம் தா..னே-அது
(1+SM+1)
(MUSIC)
கச்சேரி மே..டைகள் கேளிக்கைக் கூடங்கள் எங்கும்-உன் சங்கீதம் தான்
(1+SM+1)
நீ இசை-போட்டு ஓடாத படம்-ஒன்று கிடையாது அக்காலம் பொற்காலம்-தான்
கோழி-கூவாத ஜாமத்துன் இசை-போல ஒரு-தாலாட்டு வேறேது பார்-தூங்க
தேன் மழை-போலே இனித்தெங்கள்-காதில் உன்னிசை பொழிகின்றது
இசை தந்திட ச்-சாமி உந்தனை பூமியில் வாழ்-எனப் படைத்திட்டது
எங்களின் பாக்கியம் தானே-அது
தேன் மழை-போலே இனித்தெங்கள்-காதில் உன்னிசை பொழிகின்றது
(MUSIC)
வெண்-நுங்குக் கருபோல உன்-பாடல்-இனிதாக நான்-கொண்ட சுவை கொஞ்சமா
(SM)
உன் இசை-போல ஒரு-நாளும் ..ஆஆ
உன் இசை-போல இனி-யாரும் உருவாக்க முடியாது
உன்-பாட்டு தனியல்லவா
நான் கேட்கின்ற பாட்டெல்லாம் உன்-பாட்டே
அதைக் கேட்காமல் நாள்-போகப் பெரும் பாடே
தேன் மழை-போலே இனித்தெங்கள்-காதில் உன்னிசை பொழிகின்றது
(Music)
நீபோட்ட இசை-எல்லாம் நான்கேட்க பல-நூறு ஜென்மங்கள்-எடுத்தாகணும் 
 (SM)
உன் விரல்-கொண்டு ஹார்மோன்யம் இசைக்கின்ற எழில்-காட்சி என்றென்றும் நான்-பார்க்கணும்
ஒரு தாய்-போல இசைப்-பாலை நீ ஊட்ட 
அதைக் குடிக்கின்ற சேய்-போல நான் 
தேன் மழை-போலே இனித்தெங்கள்-காதில் உன்னிசை பொழிகின்றது
இசை தந்திட ச்-சாமி உந்தனை பூமியில் வாழ்-எனப் படைத்திட்டது

எங்களின் பாக்கியம் தானே-அது