Wednesday, September 6, 2017

35 உலகினிலா ஐயா நீ இருந்தாய்(மலர்களை போல் தங்கை உறங்குகிறாள்)



உலகினிலா ஐயா நீ இருந்தாய் (2)  
நெஞ்சின் ஆழத்தில்-போய் அங்கே குடியிருந்தாய்
(MUSIC)
உலகினிலா ஐயா நீ இருந்தாய்  
நெஞ்சின் ஆழத்தில்-போய் அங்கே குடியிருந்தாய்

அமிழ்தினும் இனிப்பதை நீ படைத்தாய் 
உந்தன் மெல்லிசைத் தேனதில் குழைத்தளித்தாய்
(2)
(MUSIC)
பாமரன் ஆகிய நான்-தொழும் உன்னிசை 
தன்னையே மேதையும் ஆ..ஹா..ஹா என்றார்
(2)
நானிலம் போற்றிடும் இன்னிசை என்பார்
(1+Short Music+1) 
உனதிசை ஒன்றை-என்றும் யாரும் நன்றே  என்பார்
அமிழ்தினும் இனிப்பதை நீ படைத்தாய் 
உந்தன் மெல்லிசைத் தேனதில் குழைத்து தந்தாய்
(MUSIC)
பூசையில் ஓதிடும் நான்மறை..யின்-ஸ்வரம்
உன்னிசைப்-பாடலில் ஒலிக்குது-என்பார்
(Short Music)
பாரினில் இன்னிசை உன்னிசை என்பார்
யாருமுன் போல்-என்றும் பாரில் இல்லை என்பார்    
அமிழ்தினும் இனிப்பதை நீ படைத்தாய் 
உந்தன் மெல்லிசைத் தேனதில் குழைத்து தந்தாய்
(MUSIC)
சேய்மனம் ஒன்றையே ஆண்டவன் என்பார் 
அன்னவர் உன்-மனம் சேயுளம் என்பார் 
(2)
(Short Music)
ஆண்டவன் பாட்டினில் உள்ளனன் என்பார்
உலகினில் வந்தே உன்னில் பாட்டின் தெய்வம் நின்றார்
உலகினிலா ஐயா நீ இருந்தாய்  
நெஞ்சின் ஆழத்தில்-போய் அங்கே குடியிருந்தாய்

அமிழ்தினும் இனிப்பதை நீ படைத்தாய் 
உந்தன் மெல்லிசைத் தேனதில் குழைத்து தந்தாய்
 (2)
மெல்லிசைத் தேனதில் குழைத்து தந்தாய்
குழைத்து தந்தாய் .. குழைத்து தந்தாய் 



34 சேய்கள் மறுக்காத(மலர்ந்தும் மலராத) **


சேய்கள்-மறுக்காத தாயின் பால்-போல கொடுத்த இசை-அன்னையே
என்ன கொடுத்தும்-கிடைக்காத தாயின் மடிபோல கிடைத்த-இசை உன்னதே
அதனில்-இளைப்பாறி இதத்தில் நான்-தூங்கிக் கடந்த-வாழ்வென்னதே
இந்த உலகில் இதைப்-போன்று பலருன் இசை-கேட்டு உரைப்ப..திருக்கின்றுமே
(Short Music)
சேய்கள்-மறுக்காத தாயின் பால்-போல கொடுத்த இசை- அன்னையே
என்ன கொடுத்தும்-கிடைக்காத தாயின் மடிபோல கிடைத்த-இசை உன்னதே
அதனில்-இளைப்பாறி இதத்தில் நான்-தூங்கிக் கடந்த-வாழ்வென்னதே
இந்த உலகில் இதைப்-போன்று பலருன் இசை-கேட்டு உரைப்ப..திருக்கின்றுமே
(MUSIC)
யாரின் இசை-கொண்டு வாழத்-துணையென்று நாளைக்-கழிப்பேனய்யா
இனி-நானும் கழிப்பேனய்யா 
உந்தன் இசையை உணவென்று அதனை தினம் உண்டு
வாழ்ந்து இருந்தேனய்யா .. வேறு அறியேனய்யா 
உந்தன் இசையை உணவென்று அதனை தினம்-உண்டு
உந்தன் இசையை உணவென்று …
அதனை தினம்-உண்டு …
வாழ்ந்து இருந்தேனய்யா
(Short Music)
செல்வச் செழிப்பாலும் பொன்னின்  பொருளாலும் நெஞ்சில் இதம்-சேருமா
துளி என்றும் இதம் சேருமா
வாழ்வில் துன்ப நோய்-கொண்ட நெஞ்ச நிலை-மாற  
மருந்து இசை தானய்யா .. உனது இசை தானய்யா
வாழ்வில் துன்ப நோய்-கொண்ட நெஞ்ச நிலை-மாற  
வாழ்வில் துன்ப நோய்-கொண்ட ..
நெஞ்ச நிலை-மாற .. 
மருந்துன் இசை தானய்யா
(MUSIC)
உனது இசைக் காற்றின் இதத்தில் நான்-தூங்கி நடந்த-வாழ்வென்னதே
இந்த உலகில் இதைப்-போன்று பலருன் இசை-கேட்டு உரைப்ப..திருக்கின்றுமே
(MUSIC)
தனித்து இமைமூடி உனது இசைகேட்டுக் கழித்த நாள்-கொஞ்சமா
இனமும்-புரியாத உணர்வு எனை-வந்து அமிழ்த்த இசை-தந்தவா
அமிழ்த இசை-தந்தவா
உந்தன் இசைபோல இதத்தைப் புவிமேலே கொடுக்க இனி யாரய்யா
இந்த மண்ணில் நீ-மீண்டும் பிறந்து வந்தால்தான் நடக்கும் அதுபோலய்யா
இசையின் இறைவன் நீ-தானய்யா
ம்ம்ம்..
ஆஹா ஆஹஹாஹாஹ ஆஹஹாஹாஹ ஆஹஹாஹாஹஹா

ஆஹ ஆஹஹாஹாஹஹா.. ஆஹ ஆஹஹாஹாஹஹா





Sunday, September 3, 2017

33. கொடுத்த இசை(வளர்ந்த கலை) **




கொடுத்த-இசை ஒன்றிரண்டா கோடி-தான் மன்னா 
(2)
குடும்பத்துடன் கேட்க-இசை போட்டதால் மன்னா
அதைக் கேட்கும்-யாரும் குடும்பமாக ஆகினார்-ஒண்ணா
(2)
கொடுத்த-இசை ஒன்றிரண்டா கோடி-தான் மன்னா 
அது பெரிய-இசைக் களஞ்சியத்தைப் போலதான்-மன்னா
(MUSIC)
காதில்-உந்தன் பாட்டு தேனை ஊற்றுமே மன்னா  (2)
சத்தியமே  அது-மனதை ஆற்றுமே மன்னா 
சாமி சத்தியமே வருடி-மனதை ஆற்றுமே மன்னா
இந்த காசினிக்கே செல்வம்தந்தாய் இசையுமாய் மன்னா
நடந்ததையே எழுதுகிறேன் இசையின்-மாமன்னா 
அதை எழுதும்-திறம் அருளுகிறாய் இசையினால் மன்னா
கொடுத்த-இசை ஒன்றிரண்டா கோடி-தான் மன்னா 
அது பெரிய-இசைக் களஞ்சியத்தைப் போலதான்-மன்னா
(MUSIC)
தினம்-விதமாய் படமெடுத்தார் நூறுமாய் மன்னா (2)
அவர் தேவையினை ஆசையினைக் கேட்டு-நீ மன்னா (2)
கொடுத்ததெல்லாம் பாட்டில்-சொல்ல முடியுமா-மன்னா (2)
அதை யார்-முயன்றும் துளியும்-கூட முடியுமா-மன்னா
கொடுத்த-இசை ஒன்றிரண்டா கோடி-தான் மன்னா 
அது பெரிய-இசைக் களஞ்சியத்தைப் போலதான்-மன்னா
(MUSIC)
என் வரையில் உனக்கு இணை வேறில்லை மன்னா (2)
ஒரு வெற்றிடத்தை விட்டுச் சென்றாய் நாதத்தில் மன்னா
அதன் கொள்ளிடமாய் ஆனவனும் நீயன்றோ மன்னா
கொடுத்த-இசை ஒன்றிரண்டா கோடி-தான் மன்னா 
அது பெரிய-இசைக் களஞ்சியத்தைப் போலதான்-மன்னா
(MUSIC)
காசினுக்கா இசையமைத்தாய் சொல்லு நீ மன்னா
தந்தக் காசினுக்கா இசையமைத்தாய் சொல்லு-நீ மன்னா
நீ வெற்றிடத்தை விட்டுச் சென்றாய் நாதத்தில் மன்னா
 காவிரியாய் பெருக்கெடுத்தாய் இசையிலே மன்னா
நீ காவிரியாய் பெருக்கெடுத்தாய் இசையிலே மன்னா
நடந்ததையே எழுதுகிறேன் இசையின்-மாமன்னா 
அதை எழுதும்-திறம் அருளுகிறாய் இசையினால் மன்னா
கொடுத்த-இசை ஒன்றிரண்டா கோடி-தான் மன்னா 
அது பெரிய-இசைக் களஞ்சியத்தைப் போலதான்-மன்னா 
குடும்பத்துடன் கேட்க-இசை போட்டதால் மன்னா
அதைக் கேட்கும்-யாரும் குடும்பமாக ஆகினார்-ஒண்ணா
(2)
கொடுத்த-இசை ஒன்றிரண்டா கோடி-தான் மன்னா 
அது பெரிய-இசைக் களஞ்சியத்தைப் போலதான்-மன்னா 
அது பெரிய-இசைக் களஞ்சியத்தைப் போலதான்-மன்னா





32. அழகழகான பலராகம்(ஒளிமயமான எதிர்காலம்) **



அழகழகான பல-ராகம்-இசை-வானத்தில் ஜொலிக்கிறது
(Short Music)
அவை-யாவும் மெல்லிசை மன்னரின் கையில் ஜாலம் புரிகிறது
அழகழகான பல-ராகம்-இசை வானத்தில் ஜொலிக்கிறது
(MUSIC)
நாதனின் இசையில் பாரில்-பல்-கோடி மாந்தரும்-மகிழ்கின்றார் 
இசைச் சாதனையாற்றும் நாதக்-கலைஞர் யாவரும் புகழ்கின்றார்
(1+SM+1)
மாலை சூட்டிப் புகழ்-நீராட்டி தோத்திரம் செய்கின்றார் 
ராஜ-ராஜன் இசை-மகராஜன் பாட்டினில் ஆடுகின்றார்
(Short Music)
அழகழகான பல-ராகம்-இசை வானத்தில் ஜொலிக்கிறது
(MUSIC)
இவரிசைக்கிணையே எங்கணுமில்லையே இதுநிஜமே அறிக 
அண்டம் தோன்றிடக் காரண..மாகும் ப்ரணவம் இவரிசையே அறிக 
 (1+SM+1)
இங்கிவர்-தம்மை பெற்றிட ஆன்றோர் புரிந்தனரோ தவமே
ஆத..லாலோ வந்தனள்-வாணி இவர் உருவில் புவியே
(Short Music)
அழகழகான பல-ராகம்-இசை வானத்தில் ஜொலிக்கிறது
அவை-யாவும் மெல்லிசை மன்னரின் கையில் ஜாலம் புரிகிறது
அழகழகான பல-ராகம்-இசை வானத்தில் ஜொலிக்கிறது



Saturday, September 2, 2017

31 மன்னா உ..னை-உரைக்க ஈடில்லையே(புல்லாங்குழல் கொடுத்த) **



மன்னா உ..னை-உரைக்க ஈடில்லையே
உந்தன் இசை-போல்-சுவை ஒன்று வேறில்லையே
(2)
மண்ணாளும் செல்வப் பெரும் ராஜாக்களே
உந்தன் இசைகேட்டு அதன் அடிமை ஆனார்களே
(2)
 மன்னா உ..னை-உரைக்க ஈடில்லையே
உந்தன் இசை-போல்-சுவை ஒன்று வேறில்லையே
(MUSIC)
கண்ணீர் வரத்-தகிக்கும் சோகங்களை 
வெல்ல மருந்தாகும் மன்னா-உன் கானங்களே
(2)
என்-போல இன்னும்-பல மாந்தர்களை 
பித்தன் உருவாகச் செய்யும் உன் பாடல்களே
பித்தம் தெளிவாக்க மருந்தும்-உன் பாடல்களே 
 மன்னா உ..னை-உரைக்க ஈடில்லையே
உந்தன் இசை-போல்-சுவை ஒன்று வேறில்லையே
(MUSIC)
ஓர்-பாடல் தன்னில்-பல தருகின்றவன் 
ஒரு நொடிப்-போதில் பல-பாடல் அருள்கின்றவன்
(2)
மழை-போல் -இசை-கணத்தில் பொழிகின்றவன்
சொல்ல ஈடொன்று இல்லாமல் திகழ்கின்றவன் 
இன்றும் ஈடொன்று இல்லாமல் திகழ்கின்றவன்
மன்னா உ..னை-உரைக்க ஈடில்லையே
உந்தன் இசை-போல்-சுவை ஒன்று வேறில்லையே
 (MUSIC)

அந்நாளில் கொடைக்காக கர்ணன்இருந்தான்  
அன்று பார்த்தனும் வில் திறனுக்கென்றே இருந்தான்
(2)
ஆண்டவனும் கானத்திற்கு ஒன்றே படைத்தான் 
நாம் கேட்பதற்கு மன்னரிசை என்றே படைத்தான் 
தான் கேட்பதற்கு மன்னரிசை உள்ளே புகுந்தான்
மன்னா உ..னை-உரைக்க ஈடில்லையே
உந்தன் இசை-போல்-சுவை ஒன்று வேறில்லையே
மண்ணாளும் செல்வப் பெரும் ராஜாக்களே
உந்தன் இசைக்-கடிமை என்றாகிப் போனார்களே
 மன்னா உ..னை-உரைக்க ஈடில்லையே
உந்தன் இசை-போல்-சுவை ஒன்று வேறில்லையே







Wednesday, August 30, 2017

30 இன்பம் வீசும்(புத்தன் ஏசு) **



இன்பம் வீசும் சாந்தி-பிறந்திடும் நெஞ்சினில்-தன்னாலே  மன்னா உன்னிசை என்றாலே
(1+SM+1)
பொங்கும் உவகைப் பீறிட-நெஞ்சம் துள்ளும் மான்-போலே 
ராகம்-குழைத்து நீயும்-கொடுத்த இன்னிசைத்-தேனாலே
வேள்விகளைப்-போல் நீயும்-உழைத்துக் கொடுத்த-நல்  பண்ணாலே 
கேட்கும் எங்கள் வாழ்வில் என்றும் ஆகும் நன்னாளே
இன்பம் வீசும் சாந்தி-பிறந்திடும் நெஞ்சினில்-தன்னாலே மன்னா உன்னிசை என்றாலே 
(MUSIC)
துயர் தந்த-சூடு தனில்-நெஞ்சு வெந்து 
குமைகின்ற-போது பொழில் என்று வந்து 
(2)
குளிர்வித்து-நன்கு அணைக்கின்றதென்று 
சிறப்பான-பேரு உன்-பாட்டுக்கொன்று
மன்னர்-மெல்லிசை என்ற-உன்னிசைத் தேன்மழைப் பொழிவாலே 
இந்த-உலகமும் என்றும்-இன்னிசைப் பஞ்சத்தில் அழியாதே
இன்பம் வீசும் சாந்தி-பிறந்திடும் நெஞ்சினில்-தன்னாலே மன்னா உன்னிசை என்றாலே 
(MUSIC)
பொருள்-கொண்ட பேர்க்கும் வரும்-வாழ்வில் தொல்லை 
கரம் ஏந்தி-வாழ்வில் இளைத்தோர்க்கும் தொல்லை
(2)
எவர் வாழ்வில்-சோக நோய்-வந்த போதும்   
மருந்தாக உன்-தேன் பாடல்-ஒன்று போதும்
அழுதகண்-துடைக்கவும் துவண்டவர்-நிமிரவும் ஒருவழி உந்தன் இசை 
என்பதெற்கென்றே  நீ-தான் மன்னா இறைவனும் பெற்ற-பிள்ளை
இன்பம் வீசும் சாந்தி-பிறந்திடும் நெஞ்சினில்-தன்னாலே  மன்னா உன்னிசை என்றாலே
பொங்கும் உவகைப் பீறிட-நெஞ்சம் துள்ளும் மான்-போலே 
ராகம்-குழைத்து நீயும்-கொடுத்த இன்னிசைத்-தேனாலே
இன்பம் வீசும் சாந்தி-பிறந்திடும் நெஞ்சினில்-தன்னாலே  
மன்னா உன்னிசை என்றாலே




Tuesday, August 29, 2017

29 அம்மாடி(அம்மானை)



அம்மாடி உன்னிசையில் கண்மூடி (2)
ஆழ்ந்துவிட சுகம் மேவி
கூடி-விடும் எனை ஊடி (2)

செப்பிடச் சொல்லிலை தூரிகை
அது தீட்டிடச் சித்திரம் போலிலை 
(2)
இன்னது தான்-என சொல்லிலை
உந்தன் இன்னிசை-போலெதுமில்லையே 
(2)
அம்மாடி உன்னிசையில் கண்மூடி
ஆழ்ந்துவிட சுகம்-மேவி கூடி-விடும் எனை-ஊடி கூடி-விடும் எனை-ஊடி
 (MUSIC)
பாலையும் சுவை-தெளி தேனையும் கலந்தருந்திடத் தோன்றிடும் ஓர்சுகம்
(2)
ஆயிரம் மடங்கதைப் போலவும் ஓர்-ஓசையில் தந்திடும் உன்-ஸ்வரம்
(2)
மற்றவர்க்கே-இசைச் சாத்திரம் அது உன்னிசை வடிவினில் வாழ்ந்திடும்  (2)
உன்னிசையால் எதும் சாத்தியம் அதைச் சொல்லிட ஏதிங்கு ஓர் திறம்
(2)
அம்மாடி உன்னிசையில் கண்மூடி
ஆழ்ந்துவிட சுகம் மேவி கூடி-விடும் எனை-ஊடி கூடி-விடும் எனை-ஊடி
 (MUSIC)
உன்னிசையைப்-பண் பாடிட அதன்-பெருமையைப் பாரினில் கூறிட
நல்லிசையை-நான் தேடினேன் பின் உன்னிசையைத்-தான் நாடினேன்
உன்னிசையில்பண் படித்திட பல *சங்கதிகள் வந்து விழுந்தன
உன்னிசையே சொல் தந்திட இதில் ஒன்றுமில்லை என்  திறமென
அம்மாடி உன்னிசையில் கண்மூடி
ஆழ்ந்துவிட சுகம் மேவி கூடி-விடும் எனை-ஊடி கூடி-விடும் எனை-ஊடி


*சங்கதிகள்=விஷயங்கள். உன்னிசை மெட்டில் எழுதும்போது எல்லாமே உன் இசையே தந்துதவுகிறது. இதில் என் திறன் என்ன இருக்கிறது. நீ தானே எழுதுகிறாய் மன்னா.





Monday, August 28, 2017

28 தேன் போலே இனிக்கும்(வேலாலே விழிகள்)




தேன்-போலே இனிக்கும் நல்ல-பால் போலே சுவைக்கும் 
உயர்-வானோர்கள் அருந்தும் 
அமுதினைப் போல-உன் மெல்லிசை ஆகிடும் (2)
ஆ .. ஆ ..
(Short Music)
நீ-போடும் இசையோடு வாழ்நாளைக் கழிப்பேன் ஐயே 
உன்னுடல் போகினும் உன்னிசை வாழ்ந்திடும் 
என்னோடு துணையாய் நின்றே 
ஆ ..  என்னோடு துணையாய் நின்றே
உன்னிசை வாழ்ந்திடும் என்னுடன் துணைவரும்
உன்னிசை வாழ்ந்திடும் என்னுடன் துணைவரும்
தேன்-போலே இனிக்கும் நல்ல-பால் போலே சுவைக்கும்
(MUSIC)
உந்தன்-இன்னிசை எங்கள்-வாழ்வினில் என்றும் ஆதரவாகும் 
துன்பங்கள்-படை கொண்டே-எங்களை வந்தே-தாக்கிடும் போதும்
ஆ .. ஆ ..
என்றும்-மெய்விளை நோயால்- மக்களும் கொண்டிடுவார்-மன வாட்டம்
ஆனால்-உன்னிசை கேட்கும்-எம்மிடம் பலித்திடுமா அதன் ஆட்டம்
பூலோக வாழ்வில் துன்பங்கள் ஆறாய் 
தான் வந்த போது பந்தாடும் போது
உன்னிசை வாழ்ந்திடும் எம்முடன் துணைவரும்
உன்னிசை வாழ்ந்திடும் எம்முடன் துணைவரும்
தேன்-போலே இனிக்கும் நல்ல-பால் போலே சுவைக்கும்
(MUSIC)
 எங்கும்-சங்கொலி கேட்கும் வெஞ்சமர் செய்யும்-போர்க்களம் நின்று 
நன்றாம்-கீதையைச் சொன்னான்-மாதவன் நின்றான்-பார்த்தனும் கேட்டு
ஓ .. ஓ 
 இன்றைக்கும் அதுபோலே உன்னிசை நின்றே கேட்குது நன்று 
சித்தம்-வந்திடர் தந்தே-வாட்டிடும் நெஞ்சத் துயரினை-வென்று
தாருங்கள்  இன்னும் என்றுள்ளம் கெஞ்சும் 
கீதங்கள் தந்தே உன்னுள்ளம் கொஞ்சும்
உன்னிசை வாழ்ந்திடும் எம்முடன் துணைவரும்
உன்னிசை வாழ்ந்திடும் எம்முடன் துணைவரும்

தேன்-போலே இனிக்கும் நல்ல-பால் போலே சுவைக்கும் 
 (BOTH)






Wednesday, August 23, 2017

27 நாதம் உருவாகும் இறையோனிடம்(பார்வை யுவராணி கண்ணோவியம்)



நாதம் உருவாகும் இறையோனிடம்
வேதம் இதைத்-தானே பறை-சாற்றிடும்
சோகம் சென்றோட இசைபாடிடும்
உனைப்-பார் இசை-ராஜன் எனப்போற்றிடும்
நாதம் உருவாகும் இறையோனிடம்

வேதம் இதைத்-தானே பறை-சாற்றிடும்

(MUSIC)
யாரென்ன தந்தாலும் தேனென்று தந்தாலும் 
உன்பாட்டுக்கீடாகுமோ
(1+Short music+1)
யாரிங்கு வந்தாலும் நூறாண்டு சென்றாலும்
உன் பாட்டு போலாகுமோ
எந்த காதும் களிப்பாகும்  கண் மூடிடும்
எந்த நாளும் உன்கீதம் இசைகூட்டிடும்
நாதம் உருவாகும் இறையோனிடம்
வேதம் இதைத்-தானே பறை-சாற்றிடும்
(MUSIC)
கால்வண்ணம் அங்கென்று கைவண்ணம் இங்கென்று
கவிகம்பன் பண்பாடுமே
(1+Short music+1)
மால்வண்ணம் என்றாகும் ஸ்ரீராமன் திருமேனி  தனை-அந்த கவிசொல்லுமே
உன்னைப் பாட கவிகம்பர் எதைக்கூறுவார்
உந்தன்-மேனி அணுவுள்ளும் இசை-தானென்பார்
நாதம் உருவாகும் இறையோனிடம்
வேதம் இதைத்-தானே பறை-சாற்றிடும்
(MUSIC)
உன்-மெட்டு இழையோட என்-பாட்டில் உனைப்-பாட
யுகம்-யாவும் போதாதையா
நீ-தந்த இசைமெட்டில் யார்-மூழ்கிக் கிடந்தாலும் யுகம்-போதல் தெரியாதையா
என்-வேள்வி உன்-மெட்டில் பண்-செய்வதே
அதன்-மூலம் எந்நாளும் உனைச்சொல்வதே 
நாதம் உருவாகும் இறையோனிடம்
வேதம் இதைத்-தானே பறை-சாற்றிடும்
சோகம் சென்றோட இசைபாடிடும்
உனைப்-பார் இசை-ராஜன் எனப்போற்றிடும்
நாதம் உருவாகும் இறையோனிடம்





Monday, August 21, 2017

26 ரொம்ப நேரம் (கொஞ்ச நேரம் என்னை மறந்தேன்)


ஆ.. ஆ..
ரொம்ப-நேரம் உன்னில் திளைத்தேன் (2)
கடல் போலும்-உந்தன் இசை கேட்டும்-என்ன (2)
எந்தன்-தாகம் இன்னும் ஏனோ உந்தன்-கானம் என்ன தானோ
ரொம்ப-நேரம் உன்னில் திளைத்தேன்
ஸ்..ஆ..
 (SHORT MUSIC)
அந்தத்-தேனை இன்னும் பிழிந்தே
திரை கானம்-எனத் தரும் ஜாலம்-என்ன
உன்னைப் போலே தர-யாரோ உன்னைப் போலே இனி-யாரோ
அந்தத்-தேனை இன்னும் பிழிந்தே
ஸ்..ஆ..
 (MUSIC)
உன்-தேன் இசை தனை வாடிக்கையாக
. .ஆ..
  உன்-தேன் இசை தனை வாடிக்கையாக
கேட்டு-மகிழ்ந்தேன் கேளிக்கையாக
கேளிக்கை வேறு ஏதெனக் கூறு (2)
மன்னனுன் இசைபோல பாரினில் ஏது
அந்தத்-தேனை இன்னும் பிழிந்தே..
ஸ் ஆ..
(MUSIC)
கேட்கையில் திதிப்பாக இருப்பதை இசையாக (2) 
கொடுத்தனை மன்னா-நீ எந்நாளும் எமக்காக (2)
உன்னிசை தனை-நாளும் ஆசையில் மனம்-கேட்கும் (2)
வேலைகள் எளிதாக்கும் பாதையுன் இசையாகும் (2)
ரொம்ப-நேரம் உன்னில் திளைத்தேன் .. ஆ..
(MUSIC)
காலையில் உன்-கீதம் கேட்டதன் பின்னாலே
நாளது நலமாகப்  போகுது தன்னாலே
இசைதனில் பல-வ்யாதி போகுது எனும்-சேதி (2)
நிஜமென ஆக்கிடும் உன்னிசை புவி-மீதில் (2)

அந்தத்-தேனை இன்னும் பிழிந்தே
திரை கானம்-எனத் தரும் ஜாலம்-என்ன
உன்னைப் போலே தர-யாரோ உன்னைப் போலே இனி-யாரோ

அந்தத்-தேனை இன்னும் பிழிந்தே








Thursday, August 17, 2017

25 ஒரு நாள் இல்லை (ஒருநாள் இரவு)




ஒரு-நாள் இல்லை நான் பலநாள் நினைத்திருக்கேன் (2)

அடடா இல்லை இவர்-இசை-போல் ஏதுமில்லை
(1+SHORT MUSIC+1)
(MUSIC)
பலநாள்-ஓடி பூமியில்-தேடிப் பார்த்தேன் கிடைக்கவில்லை (2)
இனியும் கேட்பேன் இதுபோல் இசை என-நான் நம்பவில்லை
ஒரு-நாள் இல்லை நான் பலநாள் நினைத்திருக்கேன்
(MUSIC)
எங்கும் இசையே அதுவே இறை-என்பார் (2)
இது தானே மறைநான்கும் கூறும் உண்மை-என்பார் (2)
எனவே இசையின் இறைதான் அவர் அதிலோர் ஐயமில்லை
இசையின் இறைவனென்பேன்
ஒரு-நாள் இல்லை நான் பலநாள் நினைத்திருக்கேன்

Tuesday, August 8, 2017

24 ஒண்ணுக்கொண்ணு அழகு (பொன்னுக்கென்ன அழகு)



ஒண்ணுக்கொண்ணு அழகு
ஓஹோஹோ ஓஹோஹோ ஹும்
ஒவ்வொண்ணுமே அருமை
ஆஹா ஹ  ஆஹா ஹ  ஹும்
ஒண்ணுக்கொண்ணு அழகு.. 

ஆ..ஆ 
ஒவ்வொண்ணுமே அருமை.. 

ஆஆ  ஆ ..ஆஆ  ஆ
உன்-பண் எதுவும் என-உலகமும் கூறாதோ மெட்டின்-மன்னனே
ஒண்ணுக்கொண்ணு அழகு..
ஒவ்வொண்ணுமே அருமை..
(MUSIC)

இசையருள் இறையருள் உன்னிடத்தில் துலங்கிடுமே
உனதிசை திரைமிசை தருமிசை இலக்கணமே

(2)
ஒரு-எழில் கண்டதும் மறு-எழில் தோன்றிடும்
ஒண்ணுக்கொண்ணு அழகு
ஹாஹ் ...ஹா..
ஒவ்வொண்ணுமே அருமை
ஹாஆஆ  .. ஹாஆஆ
உன்-பண் எதுவும் என-உலகமும் கூறாதோ ..ஓ ..
ஒண்ணுக்கொண்ணு அழகு
ஒவ்வொண்ணுமே அருமை

(MUSIC)

என்புருகும்-வண்ணம் அரசே தந்த-மெட்டு இன்னும்
வேறு-எங்கும் போகவில்லை காதிலே ஆடுதே
தேனமுதை-மிஞ்சி அரசே தோன்றுமிசை கொஞ்சி
ஆவல்-தீர பாரின்-மீது அன்று-நீ தந்ததே

உண்டோ உனது-இசைபோல் எங்கும் நீயே-வந்து சொல்லேன்
எங்கள் ஏக்கம்-தீர ராகம் வந்தே போடு-மன்னா
ஒண்ணுக்கொண்ணு அழகு ஹாஆஆ  .. ஹாஆஆ
ஒவ்வொண்ணுமே அருமை ஹாஆஆ  .. ஹாஆஆ

(MUSIC)
ஆசைகொண்டு நெஞ்சு இசைக்கு ஏங்கி-உன்னைக் கண்டு  
மந்தி-போலே கெஞ்சிக்-கொஞ்சி என்னவோ வேண்டுதே

ஏழுசுரம்-பூட்டி அதனில் நாதக்கலை காட்டி
மன்னன்-நீயும் தந்த-நாதம் பைத்தியம் ஆக்குதே
அன்றே தந்த-நாதம் அது நன்றே-இன்றும் வாழும்
கொன்றே தின்னும்-ஆவல் அதை-நின்றே கேட்கத் தூண்டும்

ஒண்ணுக்கொண்ணு அழகு.. ஹாஆஆ ..ஆஆஆ
ஒவ்வொண்ணுமே அருமை.. ஆஆஆ ..ஆஆஆ
உன்-பண் எதுவும் என-உலகமும் கூறாதோ ..ஓ ..

ஒண்ணுக்கொண்ணு அழகு
ஒவ்வொண்ணுமே அருமை
(BOTH)





Saturday, August 5, 2017

23 அருவிகள் எனும்படி விழும்(அழகிய தமிழ் மகள் இவள்)





விருத்தம்

மூச்சுக்கும் இசை-ஒன்று பேச்சுக்கும் இசை-என்று தந்தாய் மன்னா-நன்கே
ஹோ ,,(Humming)
ராகங்கள் தினமேங்கும் உன்-பாட்டில் வரவேண்டும் என்றே உன்னைக் கண்டே
ஹோ ,,(Humming)

________________
அருவிகள் எனும்படி விழும்
இசை-இவரிடம் ஊற்றெடுத்..திடும்
வெள்ள..மென-அது பெருக்கெடுத்..திடும்
அதில்-நான் குளித்தேன் களிப்பால் குதித்தேன்
(Very Short Music)
அருவிகள் எனும்படி விழும்
இசை-இவரிடம் ஊற்றெடுத்..திடும்
வெள்ள..மென-அது பெருக்கெடுத்..திடும்
அதில்-நான் குளித்தேன் களிப்பால் குதித்தேன்

(MUSIC)

வானவர்கள் இன்னும் இன்னும்-என உண்ணும்
தேவமுதும் நாணும் மன்னரிசை முன்னம்
(2)
மன்னரிசைத் தென்றல் வீசுகிற சோலை
ஓர்-நொடியில் பாட்டை செய்து-தரும் ஆலை

(2)
இசையினில் இருப்பது ஸ்வரம்
அது இவரிடம் பெறுவது தரம்
அந்த ஆண்டவன் அளித்த-நல் வரம்
மகிழ்வில் உலகம் அதனால் திளைக்கும்

அருவிகள் எனும்படி விழும்
இசை-இவரிடம் ஊற்றெடுத்..திடும்
வெள்ள..மென-அது பெருக்கெடுத்..திடும்
அதில்-நான் குளித்தேன் களிப்பால் குதித்தேன்
(MUSIC)

ராகம் எழில் எழும் விதம்
தாளம் இதம் தரும் விதம்
(2)
தந்திட்டார் மன்னர் தந்திட்டார்

 யாரும் அடா..டடா-எனும்
வண்ணம் சதா-பெரும் இதம்
(2)
தந்திட்டார் மன்னர் தந்திட்டார்
இவரிசை தனியொரு சுவை
என்று இருக்குது பலரது உரை
நெஞ்சை சிறையிடும் இவரிசை தனை
கேட்கும் எவர்க்கும் இலை-ஊண் உறக்கம்

அருவிகள் எனும்படி விழும்
இசை-இவரிடம் ஊற்றெடுத்..திடும்
வெள்ள..மென-அது பெருக்கெடுத்..திடும்
அதில்-நான் குளித்தேன் களிப்பால் குதித்தேன்
(MUSIC)

பாடல் வரி உரைக்..கையில்
சேரும் இசை தனைக் கையில்
தந்திட்டார் மன்னர் தந்திட்டார்
 பாடல் வரி எதோ எதோ
இந்தா பிடி இசை இதோ
(2)
என்றே-தான் மன்னர்..
(PAUSE)
என்றே-தான் மன்னர் தந்திட்டார்
கவிகளின் அரசொரு புறம்
நல்ல இசைதரும் அரசெதிர்ப்புறம்
ஒரு சிலையென பலர்-மறு புறம்
அமர்ந்தார் இசைத்தார் இசைமேல் மிதந்தார்
அருவிகள் எனும்படி விழும்
இசை-இவரிடம் ஊற்றெடுத்..திடும்
வெள்ள..மென-அது பெருக்கெடுத்..திடும்
அதில்-நான் குளித்தேன் களிப்பால் குதித்தேன்