Dedicated to Mellisai Mannar M.S.V
M.S.V. எனும் ஒரு சகாப்தம்
(24 June 1928 – 14 July 2015)
சாதல் ஏதுந்தன் இசைக்கு எந்த-நாளும் உன்னிசை-உளது
இசை-மன்னன் நீ-உந்தன் இசைக்கு
ஒரு-போதும் முடிவெங்கு-உளது
(SM)
(2)
(2)
சொல்லாத பாடங்கள்-பலது மன்னா-உன் பாடலில்-உளது
நாத-தேவனின் உருவே-நீ வந்து-செய்யாத பாட்டென்ன-உளது
(2)
சாதல் ஏதுந்தன் இசைக்கு எந்த-நாளும் உன்னிசை-உளது
இசை-மன்னன் நீ-உந்தன் இசைக்கு ஒரு-போதும் முடிவெங்கு-உளது
(MUSIC)
துன்பம் வரும்-நெஞ்சில் புதுத் தென்றல்-எனப்-பண்ணில்
ஆறாய்-உன்..னிசை-பாயுது
தை-தை-என ஆடும்-எழில் மங்கை-என-உவகை
தான்-பெற்று நெஞ்சாடுது
(2)
எந்நாளும் சங்குக்கு-வெளுப்பு
சுட்டாலும் சிறப்பென-இருக்கு
சங்கு போல-உன் இசைதானோ
காலம் சென்றாலும் முழங்குது-சிறந்து
சாதல் ஏதுந்தன் இசைக்கு எந்த-நாளும் உன்னிசை-உளது
இசை-மன்னன் நீ-உந்தன் இசைக்கு ஒரு-போதும் முடிவெங்கு-உளது
(MUSIC)
என்றும் இசை-வாழும் அதில்-இன்பம் உருவாக்கும்
ஊற்றாகும் சப்த-ஸ்வரம்
பாடல் எனும்-கிண்ணம் தனில்-பித்தம் தரும்-வண்ணம்
தந்தாய்-நீ எங்கள்-வரம்
ஐயா-உன் பைத்தியம் எனக்கு
உன்-கீதமே அதன் மருந்து
இசையின்-தேவதை அலங்காரம்
செய்து கொண்டாளோ உன்னிடம் பிறந்து
சாதல் ஏதுந்தன் இசைக்கு எந்த-நாளும் உன்னிசை உளது
இசை மன்னன் நீ-உந்தன் இசைக்கு ஒரு-போதும் முடிவெங்கு உளது
No comments:
Post a Comment