Thursday, April 21, 2016

7. தேனாய் இசைதரும் (நிலவே என்னிடம் மயங்காதே)

Dedicated to M.S.V

M.S.V. எனும் ஒரு சகாப்தம்
(24 June 1928 – 14 July 2015)

தேனாய் இசைதரும் பெருமானே நீ-அளிக்கும் இசைபோல் வேறில்லை (2)
ஆஹா அது-தரும் இதம்போலே-வே..றெதுவும் மனதில் தரவில்லை
தேனாய் இசைதரும் பெருமானே-நீ அளிக்கும் இசைபோல் வேறில்லை
(MUSIC)
ஜாடையில் உனைப்போல் பலர்-வரலாம் 
உன் ஞானத்தை அவரின் இசைதருமோ 
(2) 
மாலையில் விளக்குகள் ஒளிர்ந்திடலாம் 
ஓராதவன் ஒளியை அவைதருமோ
தேனாய் இசைதரும் பெருமானே-நீ அளிக்கும் இசைபோல் வேறில்லை
(MUSIC)
உனைப்போல் இசை..யை யார்-அறிவார்
ஓர் மெல்லிசை விருந்தை யார்-படைப்பார்
(2)
தேடிவிட்..டேன்-எங்கும் காணவில்லை ஓர்-சூரியன் அன்றோ இவ்வுலகே
தேனாய் இசைதரும் பெருமானே-நீ அளிக்கும் இசைபோல் வேறில்லை
(MUSIC)
அமைதியில்லாத நேரத்திலே
உந்தன் பாட்டினை ஓர்-முறை கேட்டுவிட்டால்
(2) 
நிம்மதி அடைந்தே நான்-மகிழ்வேன் 
என்று உலகில்-உன்னைத்..தான் புகழ்ந்திடுவார்
தேனாய் இசைதரும் பெருமானே நீ-அளிக்கும் இசைபோல் வேறில்லை
ஆஹா அது-தரும் இதம்போலே-வே..றெதுவும் மனதில் தரவில்லை
தேனாய் இசைதரும் பெருமானே-நீ அளிக்கும் இசைபோல் வேறில்லை

No comments:

Post a Comment