Thursday, April 21, 2016

6. நீ என்னென்ன சொன்னாலும்(நீ என்னென்ன சொன்னாலும் )





Dedicated to M.S.V



M.S.V. எனும் ஒரு சகாப்தம்
(24 June 1928 – 14 July 2015)

நீ என்னென்ன சொன்னாலும் இசையே
*உன்னை தின்னென்று சொன்னாலும் இசையே
(2)
நீ என்னென்ன செய்தாலும் இசையே
உயிர்-மூச்சாகும் உனக்கந்த இசையே
(2) 
இசையே .. இசையே 
(MUSIC)
உந்தன்-இசையெனும் மழையினில்-நனைந்து (2)
உன்னைத் தஞ்சம்-என்று வழிபட அடைந்து (2)
உன்னை இசைதனின் இறையென அறிந்து (2) 
உன்னைத் தொழுகிறேன் கவிபல புனைந்து கவிபல புனைந்து
நீ என்னென்ன சொன்னாலும் இசையே
உன்னை தின்னென்று சொன்னாலும் இசையே
(MUSIC)
உந்தன் இசைதனில் பைத்தியம் பிடித்து (2)
ஏங்கும் மனத்துடன் வருந்துவர் தனக்கு
ஏங்கும் மனதுடன் வருந்துவர் தனக்கு 
என்றும் பயமிலை பயமிலைஅவர்க்கு 
ஒன்றும் பயமிலை என-அவர்..களுக்கு
உந்தன் இசையென இருக்குது மருந்து அது-அரு மருந்து
நீ என்னென்ன சொன்னாலும் இசையே
(MUSIC)
வெள்ளித் திரையினில் உன்னிசை-விருந்து 
வெற்றித் திரைப் படம் பலப்-பலக் கொடுத்து 
உள்ள கதையினை உரைப்பவர் தனக்கு
இந்த உலகமும் போகுது மறந்து நினைவுகள் பிறந்து
நீ என்னென்ன சொன்னாலும் இசையே
*உன்னை தின்னென்று சொன்னாலும் இசையே
நீ என்னென்ன செய்தாலும் இசையே
உயிர்-மூச்சாகும் உனக்கந்த இசையே
இசையே .. இசையே



* Music is the food for MSV


No comments:

Post a Comment