Tuesday, April 19, 2016

4. இசை ஆண்டவனின் மூச்சு (ஒரு தாய் வயிற்றில் - உரிமைக் குரல்)



Dedicated to M.S.V
M.S.V. எனும் ஒரு சகாப்தம்
(24 June 1928 – 14 July 2015)

Thanks to Ullagaram Ravi for beautifully singing this song.
Please visit his youtube channel for his Karaoke songs.
_____________________________



இசை-ஆண்டவனின்-மூச்சு என-உரைப்பார் 
உந்தன் இசை-கேட்டால் நன்கு அது-புரியும் 
(2)
சோர்ந்த மனதினுக்கும் உந்தன் இசைப்-பாட்டால் 
புது உரம்-பிறக்கும் என்ற நிஜம்-புரியும் 
இசை-ஆண்டவனின்-மூச்சு என-உரைப்பார் 
உந்தன் இசை-கேட்டால் நன்கு அது-புரியும் 
(MUSIC)
நாளும்-அதிகாலை உந்தன் இசைப்-பாட்டு நாளை-இனிதாக்குமே
நாளின் பல-வேலை உந்தன் இசையோடு செய்ய-எளிதாகுமே
என்று-நான் உன்னிசை தன்னையே போற்றுவேன் 
உந்தன் இசையில்-கோர்த்து கவிதை-மாலை சாற்றுவேன்
இசை-ஆண்டவனின்-மூச்சு என-உரைப்பார் 
உந்தன் இசை-கேட்டால் நன்கு அது-புரியும் 
(MUSIC)
உனது-இசையோடு கூடி-என்-பாட்டு கூட-மெருகேறுது 
எனது சொல்-நாரும் உனது இசைப்-பூவைச் சேர்ந்து மணம்-வீசுது
மெல்லிசை என்பதே உன்னிசை தானையா 
பாலைச் சோலையாகும் உந்தன் இசையின் மழையினால்
இசை-ஆண்டவ..னின்-மூச்சு என-உரைப்பார் 
உந்தன் இசை-கேட்டால் நன்கு அது-புரியும் 
(MUSIC)
கண்கள்-குளமாகும் நெஞ்சம்-வளமாகும் உந்தன் இசையாலய்யா
கல்லைக்-கனியாக்கும் முள்ளை-மலராக்கும் உந்தன் இசைதானய்யா
(2)
ரசிகரின் பைத்தியம் தீர்த்திடும் வைத்தியம்
ஐயா உந்தன்-இசைதான் என்றும்-இதுதான் சத்தியம் (2)
இசை-ஆண்டவனின்-மூச்சு என-உரைப்பார் 
உந்தன் இசை-கேட்டால் நன்கு அது-புரியும் 

சோர்ந்த மனதினுக்கும் உந்தன் இசைப்-பாட்டால் 
புது உரம்-பிறக்கும் என்ற நிஜம்-புரியும் 
இசை ஆண்டவனின்-மூச்சு என-உரைப்பார் 
உந்தன் இசை-கேட்டால் நன்கு அது-புரியும் 


No comments:

Post a Comment