Tuesday, April 26, 2016

10. அமுதைக் குழைத்து(அமுதத் தமிழில்)

Dedicated to M.S.V

M.S.V. எனும் ஒரு சகாப்தம்
(24 June 1928 – 14 July 2015)

அமுதைக் குழைத்தே இசையாய்க்-கொடுத்தாய் இசையின் தலைவன்-நீ
.. .. 
அமுதைக் குழைத்தே இசையாய்க்-கொடுத்தாய் இசையின் தலைவன்-நீ 
தமிழ்த் திரையில்-இசையால் புதுமை-படைத்தே புரட்சி புரிந்தாய்-நீ ஆட்சி புரிந்தாய்-நீ
அமுதைக் குழைத்தே இசையாய்க்-கொடுத்தாய் இசையின் தலைவன்-நீ 
வகுப்பில் தமிழின் பெருமை படித்தோம் அதனை அழகாய்-நீ (2)
உனதிசையில்-மெழுகி இதமாய்க்-கொடுத்தாய் அதுதான் MSV அடடா MSV 
(MUSIC)
சோகம் வரும்பொழுதுன் பாடல் உட்-புகுந்து வருடிக் கொடுப்பதென்ன (2) 
இசையில் முழுக-வைத்து நெஞ்சை மயங்க-வைத்துத் 
திருடிக் கொண்டதென்ன .. கொள்ளை  கொண்டதென்ன 
நாதம் இசைத்துக்-கள..வாடும்-உன்னிடமே நெஞ்சம் இருப்பதென்ன (2)
கள்ளன் உனக்கும்-சிறைப் படுத்தத் தனித்த-அதி..காரம் கொடுத்ததென்ன
ஐயா .. ஞாயம்.. என்ன..
அமுதைக் குழைத்தே இசையாய்க்-கொடுத்தாய் இசையின் தலைவன்-நீ 
இசையின் தலைவன்-நீ
(MUSIC)
எதுகை-மோனையுடன் கவிதை-தை-தை-என தனித்தே ஆடட்டுமே (2)
உனது இசை-இணைய தனித்த நிலை-மறைய ரெண்டும்-சேர்ந்ததுமே இதமாய்த் தோன்றிடுமே
உந்தன் இசை-புகுந்த எந்தன் நிலை-மறந்தப் பித்தன் எனைப்-போலவே
மண்ணில்-எண்ணிறந்த பேர்கள் தன்னின்-கதை சொன்னால் யுகம்-போகுமே
அய்யா.. யுகம்-போகுமே
அமுதைக் குழைத்தே இசையாய்க்-கொடுத்தாய் இசையின் தலைவன்-நீ 
தமிழ்த் திரையில்-இசையால் புதுமை-படைத்தே புரட்சி புரிந்தாய்-நீ ஆட்சி புரிந்தாய்-நீ
அமுதைக் குழைத்தே இசையாய்க்-கொடுத்தாய் இசையின் தலைவன்-நீ

No comments:

Post a Comment