M.S.V. எனும் ஒரு சகாப்தம்
(24 June 1928 – 14 July 2015)
இரங்கற்பா
(மெட்டு : P.சுசிலா குழுவினர் பாடிய கங்கையிலே ஒடமில்லையோ)
மெல்லிசைகோர் எல்லை-அல்லவோ நீ-மன்னனே ஏதினி நீ தந்த மெல்லிசைக்கு ஈடு சொல்ல
ஒரே ஒரு விஸ்வநாதன் .. ஒரே M.S. விஸ்வநாதன் (2)
ஒரே ஒரு விஸ்வநாதன்… (4)
ஐயா.. ஐயா.. ஐயா..
உன்னால்தான் திரைப்-படமே இனித்தது தேனாய்
நீ இல்லாமல் அவை-அறவே வெறுத்தது தானாய்
விஸ்வநாதன் ஒரே.. ஒரு விஸ்வநாதன்
உன்னால்தான் திரைப்-படமே இனித்தது-தேனாய்
நீ-இல்லாமல் அவை-அறவே வெறுத்ததுதானாய்
வைரம்-போல் உன்னிசையின் மேன்மையில்-தானாய்
பல திரைப்படங்கள் வெற்றி-கண்டு ஜொலித்தது-பாராய்
ஒரே விஸ்வநாதன் ஒரே ஒரு விஸ்வநாதன் ஒரே ஒரு விஸ்வநாதன்
மெல்லிசைகோர் எல்லை அல்லவோ நீ-மன்னனே ஏதினி நீ தந்த மெல்லிசைக்கு ஈடு சொல்ல
ஒரே ஒரு விஸ்வநாதன் .. ஒரே M.S. விஸ்வநாதன் (2)
(MUSIC)
உன்னிசைபோல் கண்டதுண்டோ உனக்கு-முன் புவி
உன் பின்னாலே வந்தவர்க்கோ நீ-தான்-முன்னோடி
ஒரே விஸ்வநாதன் ஒரே ஒரு விஸ்வநாதன்
உன்னிசைபோல் கண்டதுண்டோ உனக்கு-முன் புவி
உன்-பின்னாலே வந்தவர்க்கோ நீ-தான்-முன்னோடி
ஒரே விஸ்வநாதன் ஒரே ஒரு விஸ்வநாதன்
இதுவரையில் நீ இருந்தாய் இசைக்கொரு மன்னா..!
இனி உன்-போலே யார்தருவார் திரை இசைப்-பண்ணாய்
ஒரே விஸ்வநாதன் ஒரே-ஒரு விஸ்வநாதன் ஒரே-ஒரு விஸ்வநாதன்
மெல்லிசைகோர் எல்லை அல்லவோ நீ-மன்னனே ஏதினி நீ-தந்த மெல்லிசைக்கு ஈடு சொல்ல
ஒரே ஒரு விஸ்வநாதன் .. ஒரே M.S. விஸ்வநாதன்
(2)
(MUSIC)
பாருள்ளவரையிலும் உன்னிசைவாழ்ந்திடும் யாரும்சொல்லுவது இதேஇதே
பாரும் சொல்லுவது இதே இதே
மெல்லிசைக்கு-ஒரு விஸ்வநாதனே யாரும் சொல்லுவது இதே இதே
பாரும் சொல்லுவது இதே இதே
பாரத-தேசத்தில் நீ யொரு-நாயகன் யாரும் சொல்லுவது இதே இதே
பாரும் சொல்லுவது இதே இதே
இசைக்கொரு பெருமை சேர்த்தது நீயே யாரும் சொல்லுவது இதே இதே
யாரும் சொல்லுவது இதே இதே (4)
No comments:
Post a Comment