Tuesday, July 28, 2015

தன்னை நினைக்கும் பூமியிலே (பொன்னை விரும்பும் பூமியிலே)-Dr. APJ அப்துல் கலாம்






 
( பொன்னை விரும்பும் பூமியிலே )


தன்னை நினைக்கும் பூமியிலே பிறரை-நினைத்தே வாழ்ந்தவரே
பதவி-தேடி அலையும்-உலகில் உதவிக்கென்றே இருந்தவரே
(2)
(MUSIC)


சேயினும்-தூய சிரிப்பு-கொண்டாயே
 தாயினும்-இனிய நெஞ்சு கொண்டாயே
 (2)
வாழ்வை பிறர்க்கே அர்ப்பணித்தாயே
எங்கள் பாரதத் தலை-மகன் நீயே
எளிய-வாழ்வும் இனிய-பேச்சும் புதிய-நோக்கும் கொண்டிருந்தாயே


தன்னை நினைக்கும் பூமியிலே பிறரை-நினைத்தே வாழ்ந்தவரே
பதவி-தேடி அலையும்-உலகில் உதவிக்கென்றே இருந்தவரே
(MUSIC)


பறந்து-சென்றே பதவியைக்-கேட்டே -
வாங்கிக்-கொள்ளும் மனிதரைப்-பார்த்தேன்
(2)
உதவிக்கென்றே நீ-ஒன்று தானே
அழைத்துக் கொண்டான் ஏன்-எமன் உன்னை
வளர்ந்த உருவும் குழந்தை-மனமும் -
என்று காண்பேன் நான் இனிமேல்


தன்னை நினைக்கும் பூமியிலே பிறரை-நினைத்தே வாழ்ந்தவரே
பதவி-தேடி அலையும்-உலகில் உதவிக்கென்றே இருந்தவரே
(MUSIC)

யாரும்-ஒருத்தர் குழந்தை-என்றாலே –
அடித்துப் பிடித்து அங்கு-செல்வாயே
(2)
 உலகின்-இளைய சிசுவுனை-அந்தோ 
காலனும் மேலே கொண்டு சென்றானே
உலகில்-இருந்த எண்பத்து-மூன்று வயதுக்-குழந்தை நீ யொன்றே  


தன்னை நினைக்கும் பூமியிலே பிறரை-நினைத்தே வாழ்ந்தவரே
 பதவி-தேடி அலையும்-உலகில் உதவிக்கென்றே இருந்தவரே




என்றைக்கும் உன் போல் வருமா (பிள்ளைக்குத் தந்தை ஒருவன்) - Dr. APJ அப்துல் கலாம்







 
 
 
 
(பிள்ளைக்குத் தந்தை ஒருவன்)
 

என்றைக்கும் உன்-போல் வருமா
நீ எல்லோரும்-மதிக்கின்ற பெருமான்
(2)
நீ குழந்தையாய் மொழி படித்தாயே
நல்லத் தலைவனாய் வழி கொடுத்தாயே
(2)
என்றைக்கும் உன் போல் வருமா
நீ எல்லோரும்-மதிக்கின்ற பெருமான்
(MUSIC)

சேயான உள்ளக்-களிப்பாலும்
உந்தன் பூவான வெள்ளைச்-சிரிப்பாலும்
 (2)
பூவான வெள்ளைச்-சிரிப்பாலும்
  தேன் போல மொழி பேசி இருந்தாய் 
நீ எல்லோருக்கும் நல்ல நண்பன் நண்பன்

என்றைக்கும் உன் போல் வருமா
நீ எல்லோரும்-மதிக்கின்ற பெருமான்
(MUSIC)

செல்வாக்கு எளிமைக்கும் உண்டு
எனச் சொன்னாயே உன் வாழ்வைக் கொண்டு
(2)
சொன்னாயே உன் வாழ்வைக் கொண்டு
சொல்லாமல் உனைக் கூட்டிச் சென்றான்
நாம் விடமாட்டோம் என்றெண்ணி இறைவன் இறைவன்

என்றைக்கும் உன் போல் வருமா
நீ எல்லோரும் மதிக்கின்ற பெருமான்
நீ குழந்தையாய் மொழி-படித்தாயே
நல்லத் தலைவனாய் வழி-கொடுத்தாயே

 
 

Wednesday, July 15, 2015

2. இசைக்கு ஒரு இசையமைக்க (ஆளுக்கொரு தேதி வச்சு)


M.S.V. எனும் ஒரு சகாப்தம்
(24 June 1928 – 14 July 2015)

இரங்கற்பா

Click here to listen to the Original Song


(ஆளுக்கொரு தேதி வச்சு)
விருத்தம்
தானே ப்ரணவத்தின் இசையான பெருமான்
நீ செய்யும்-இசை கேட்டிடவே ஆசை கொண்டானய்யா
உந்தனிசை கேட்டிடவே ஆசை  கொண்டானய்யா
____________________________________________________

இசைக்கு-ஒரு இசையமைக்க ஆண்டவன் நெனச்சான்
ஆண்டவன் நெனச்சான்

(1+SM+1)
ஐயா விஸ்வநாதா அதுக்குத்தானே அவன்-உனைப் படைச்சான் (2)

இசைக்கு-ஒரு இசையமைக்க ஆண்டவன் நெனச்சான்
ஆண்டவன் நெனச்சான்

(MUSIC)
உலகினிலே பிறந்தவர்க்கோ தினமும் துன்ப சோகம்
உனதிசையைக் கேட்பதனால் குறையும் அவர்கள் பாரம்
உனதிசையைக் கேட்பதனால் குறையும் நெஞ்ச பாரம்
இசைக்கு-ஒரு இசையமைக்க ஆண்டவன் நெனச்சான்
ஆண்டவன் நெனச்சான்
(MUSIC)

உடலின்-உயிர் மட்டுமன்றோ யமனோடு போகும்
உனது-பிற உயிர்கள்-பல இசையாக வாழும்
பிற-உயிர்கள் ஆயிரமாய் இசையோடு வாழும்
(MUSIC)
வெள்ளித்திரை ஆசையெல்லாம் உன்னுடனே போச்சு (2)
மன்னவனே எனக்கு-உந்தன் இசை கொடுக்கும் மூச்சு (2)
என்-மனதுன் இசையினைத்-தான் சுத்திச்-சுத்தி அலையும்
ஆஆ..
என்-மனதுன் இசையினைத்-தான் சுத்திச்-சுத்தி அலையும்
உன்னிசையைக் கேளாத எவனுக்கென்ன தெரியும்
உன்னருமை உணராத அவனுக்கென்ன புரியும்
இசைக்கு-ஒரு இசையமைக்க ஆண்டவன் நெனச்சான்
ஆண்டவன் நெனச்சான்
ஆண்டவன் நெனச்சான்.. ஆண்டவன் நெனச்சான்



Monday, July 13, 2015

மேல்லிசைக்கோர் எல்லையல்லவோ ( கங்கையிலே ஒடமில்லையோ )



M.S.V. எனும் ஒரு சகாப்தம்
(24 June 1928 – 14 July 2015)

இரங்கற்பா

(மெட்டு : P.சுசிலா குழுவினர் பாடிய கங்கையிலே ஒடமில்லையோ)
 


மெல்லிசைகோர் எல்லை-அல்லவோ நீ-மன்னனே ஏதினி நீ தந்த மெல்லிசைக்கு ஈடு சொல்ல 
ஒரே ஒரு விஸ்வநாதன் .. ஒரே M.S. விஸ்வநாதன் (2)
ஒரே ஒரு விஸ்வநாதன்… (4)
ஐயா.. ஐயா.. ஐயா..
உன்னால்தான் திரைப்-படமே இனித்தது தேனாய்
நீ இல்லாமல் அவை-அறவே வெறுத்தது தானாய்
விஸ்வநாதன் ஒரே.. ஒரு விஸ்வநாதன்

உன்னால்தான் திரைப்-படமே இனித்தது-தேனாய்
நீ-இல்லாமல் அவை-அறவே வெறுத்ததுதானாய்
வைரம்-போல் உன்னிசையின் மேன்மையில்-தானாய்
பல திரைப்படங்கள் வெற்றி-கண்டு ஜொலித்தது-பாராய்
ஒரே விஸ்வநாதன் ஒரே ஒரு விஸ்வநாதன் ஒரே ஒரு விஸ்வநாதன்
மெல்லிசைகோர் எல்லை அல்லவோ நீ-மன்னனே ஏதினி நீ தந்த மெல்லிசைக்கு ஈடு சொல்ல 
ஒரே ஒரு விஸ்வநாதன் .. ஒரே M.S. விஸ்வநாதன் (2)
(MUSIC)
உன்னிசைபோல் கண்டதுண்டோ உனக்கு-முன் புவி
உன் பின்னாலே வந்தவர்க்கோ நீ-தான்-முன்னோடி
ஒரே விஸ்வநாதன் ஒரே ஒரு விஸ்வநாதன் 
உன்னிசைபோல் கண்டதுண்டோ உனக்கு-முன் புவி
உன்-பின்னாலே வந்தவர்க்கோ நீ-தான்-முன்னோடி
ஒரே விஸ்வநாதன் ஒரே ஒரு விஸ்வநாதன்
இதுவரையில் நீ இருந்தாய் இசைக்கொரு மன்னா..!
இனி உன்-போலே யார்தருவார் திரை இசைப்-பண்ணாய்
ஒரே விஸ்வநாதன் ஒரே-ஒரு விஸ்வநாதன் ஒரே-ஒரு விஸ்வநாதன்
மெல்லிசைகோர் எல்லை அல்லவோ நீ-மன்னனே ஏதினி நீ-தந்த மெல்லிசைக்கு ஈடு சொல்ல 
ஒரே ஒரு விஸ்வநாதன் .. ஒரே M.S. விஸ்வநாதன் 
(2)
(MUSIC)
பாருள்ளவரையிலும் உன்னிசைவாழ்ந்திடும் யாரும்சொல்லுவது இதேஇதே
பாரும் சொல்லுவது இதே இதே
மெல்லிசைக்கு-ஒரு விஸ்வநாதனே யாரும் சொல்லுவது இதே இதே
பாரும் சொல்லுவது இதே இதே
பாரத-தேசத்தில் நீ யொரு-நாயகன் யாரும் சொல்லுவது இதே இதே
பாரும் சொல்லுவது இதே இதே
இசைக்கொரு பெருமை சேர்த்தது நீயே யாரும் சொல்லுவது இதே இதே
யாரும் சொல்லுவது இதே இதே (4)